பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 காலந்தோறும் பெண் டங்களைத் தவிர்க்க முடியாமல், அவள், ஒரு சில மாதங்களில் இந்த வேலையை விட்டு விட்டே போனாள். பதினைந்து ஆண்டுகளில் இந்த நிலைமை சீராகிவிடவில்லை. திருமணமாகாமல், ஒரு பெண், தனிவாழ்வு வாழ முடியுமா என்ற வினா, இன்றைய இளம்பெண்களை மிகவும் அச்சுறுத்துகிறது. வரதட்சணைப் பேய்க்கு இடம் கொடுக்க மாட்டேன்’ என்று கல்லூரி நாட்களில் வீர சபதம் செய்யும் பெண்ணும் கல்லூரி நாட்களை விட்டு, வாழ்க்கைப் பட்டறையில் இடிபடும்போது, தனது வரதட்சணைக்குத் தானே சேமித்துக் கொள்ளத்தான் முற்படுகிறாள். அன்றாடம் கயவர் களிடமிருந்தும் கல்லூரி விடலைகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாப்பது தாலி என்ற மந்திரக்கயிறே என்று நினைக்கிறாள். ஏன், ஒரு கதையில், இப்படி ஒரு கதாநாயகி பொய்த்தாலி ஒன்றைக் கட்டிக்கொண்டு அலுவலகம் வந்து போகிறாள். இவளுடைய தோழியின் சகோதரன் இவளை உள்ளுறக் காதலிக்கிறான்-ஆனால் அயலான் மனைவி என்ற உணர்வு அவனுடைய உத்தம குணத்தைக் காட்ட-அவன் தன்னை அடக்கிக் கொள்கிறான். பின்னர், சகோதரி வாயிலாக இவள் தாலி வெறும் கயிறு என்று அறிந்தபின் மகிழ்ச்சி கரைபாயசுபம்-சுபம்-சுபம். ஒரு பெண் ஒர் ஆணின் பாதுகாப்பில் தான் இருக்கலாம்; இல்லாவிட்டால், அவளால் தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற ஒரு நீதி, ஒவ்வொரு பெண்ணுக்கும் வழிவழியாகத் தாயின் இரத்தத்தில் ஊறும் நாட்களிலேயே போதிக்கப்படுகிறது. முற்போக்குச் சித்தாந்தம் பேசும் வீட்டிலேயே, பட்ட மேற்படிப்புப் படித்த பெண்ணுக்கு முப்பதினாயிரமும் சீர் வரிசைகளும் கொடுத்துத் திருமணம் உறுதி கொள்கிறார்கள். “உங்கள் பெண் எப்படி இதற்கு ஒத்துக்கொண்டாள்?’ என்று