பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 காலந்தோறும் பெண் "இருபத்தெட்டாந் தேதியும் அவருக்கு பெர சவுரியப்படாது. ஊரிலே ஏதோ காரியம்.” “...அடாடா..? ஒரு நேரந்தான் அம்மா? உங்களுக்குத் தெரியாதா? நம்ம வீடுன்னா, எங்கிருந்தாலும் வந்துடுவாரே? எங்க தாத்தா நாள் தொடர்பு; எந்த விசேஷம்னாலும், ஐயர்தான்.” - “...அது தெரியும். ஆனா, இப்ப சந்தர்ப்பமில்ல. அவர் பெண் நாகலட்சுமி தவறிப் போயிட்டா. இருபத்தெட்டாந் தேதி பன்னண்டு நாளாறது.” “த்ஸ்...த்ஸ்... பாவமே ?. அப்படியாயிட்டுதா?... அப்ப...எங்கே போயி வேற ஆளைத் தேடுவது...” என்று வந்தவர் தவிக்கின்றார் சிறிது நேரம். “..ஆ அவரோட வருவனே, சேதுன்னு ஒரு பையன்? அவன்கூட எல்லாம் செய்வான். அவன் விலாசம் தெரியுமா?” “அவன் இப்ப இங்க இல்லியே? பம்பாய் போயிட்டான்” என்ற பெண்மணி சிறிது யோசனையுடன், 'உங்களுக்கு ஆட்சேபமில்லைன்னா நான் வரேன். ஜாங்கிரியும் போட்ட சமையலும் கச்சிதமா முடிச்சிடுவேன். கல்யாணம், டிபன், காபின்னாத்தான் முடியாது. ஒரே சமையல்தானே?..” என்று சொல்கிறாள். “நீங்களா?” சற்றே திகைக்கிறார் வந்தவர். “நான் எல்லாம் செய்யறததான். போன வாரம்கூட கவுசல்யாம்மா வீட்ல, நிச்சயதார்த்தத்துக்கு நானும் என் பெண்ணும்தான் போய்ச் செய்தோம்.” “என்ன ரேட்டு?” “எழுபத்தஞ்சு...அவாள்ளாம் நூத்திருபதுன்னு நூத்தி அம்பதுன்னு வாங்குவா. ஆனா, எங்க சமையலும்