பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கால்ந்தோறும் பெண் உடலுழைப்புத் தொழிற் களத்திலும் இவள் ஆணுக்கு உதவியாளர் என்ற சார்பு நிலையில்தான் நிற்கிறாள். வாணிப ரீதியில் ஒரு உற்பத்திச் சாதனம் தொழிற் களத்தில் உருவாகிறதென்றால், அங்கும் ஆண் முன்நின்று தன் மதிப்பை முதல் தரமாக்கிக் கொண்டு இவள் உழைப்பை இரண்டாம் பட்சத்திற்குக் கொண்டு வந்திருக்கும் நிலைமையிலேயே இன்று எல்லாத் துறைகளிலும் பார்க்க முடிகிறது. இவளுடைய கல்வி இவளுடைய திறமை இவளுடைய 'மதிப்பு அனைத்தும், உடலியல் சார்ந்ததாகவே முற்றுப்புள்ளி குத்தப்பட்டதுதான், இதற்குக் காரணம் எனலாம். பெண்ணுக்கும் வேள்வியில் பங்கு கொள்ள, உரிமையுண்டு; இந்த உரிமையை, ஆண், உபநயனம் போன்ற சடங்கில், திருமண காலத்தில் நல்குகிறான் என்று சொல்லப்படுகிறது. கைத்திரிய பிராம்மணம், இதை வ்ரதோபநயனம் என்றுரைக்கிறது. இன்றளவும் கூடத் திருமணச் சடங்குகளில், 'அக்கினிக்கு முன் கணவன்-மனைவியராக மணமக்கள் அமர்ந்திருக்கையில், மணமகன், அவள் இடுப்பில், முப்புரிகளாலாகிய முன் ஜப்புல் (தருப்பம்?) கயிற்றைக் கட்டுகிறான். இந்தக் கயிறு ‘யோக்த்ரா ஒன்றும் கட்டுப்படுபவர், (பசு போன்ற பிராணி?) யாஹ்யா” என்றும் குறிப்பிடப் பெறுகின்றனர். இடுப்புக்குக் கீழ் அவள் தூய்மைப்படுத்தப் பெறும் சடங்கு என்றும் இதற்குப் பொருளுரைக்கப்படுகிறது. இவளே வேள்விப் பொருள்; இவளிவிருந்து தோன்றும் சந்ததி-ஆண்-வேள்வியின் பயன். இதை உள்ளொளியை வேட்கும் உபநயனச் சடங்குக்கு ஒத்ததென்று கூறலாமா?