பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 179 இந்தச் சடங்கு விதியில் எத்தனை அரிய பொருள் பொதிந்திருக்கிறது? பெண்ணே! உனது முக்கியத்துவம், இடுப்புக்குக் கீழ் மட்டுமேதான்? இதற்கு முன், தாய்ச் சம்பிரதாய ஒழுக்கத்தில் நீ சதந்திரமானவளாக இருந்திருக்கலாம்; ஆனால் நீ இப்போது, இந்த ஆணுக்கே கட்டுப்படுத்தப்படுகிறாய்; வளர்ப்புப் பிராணியைக் கயிறு கொண்டு பிணிப்பதுபோல உன்னைப் பிணிக்கிறோம் என்று, சொல்லாமல் அறிவுறுத்தும் சடங்கே இது வரதோப நயனம்’ என்ற சொல், உட்பொருளை மறைக்கும் சர்க்கரைப் பூச்சு. பெண் கல்வி என்று, கண் திறப்புச் செய்ய வேண்டிய அவசியத்தை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியல் விடுதலைக்குக் குறிவைப்புச் சாதனமாகப் பல தலைவர்களும் வற்புறுத்தினார்கள். ஆனால் அதிலும் எத்துணை வேற்றுமைகள், கூர்ந்து நோக்கினால்? பெண் கல்வி, பெண் மானம், என்றெல்லாம் தலைப்பிட்டுப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த முதல் தமிழ் நாவல் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை. ஸ்திரீகள் தங்களுக்குப் படிப்பிக்கும்படி புருஷர்களை வேண்டுவதாகப் பாடுகிறார். உத்தமவன்கனே-சித்தி ஆமான்கனே உங்கட்குக் கண்க7ைன பெண்க7ைம் எங்களுக்கு வத்தை ைபடிப்ப2துங்கன்-இயவு செய்து இப்படிப் படிப்பிப்பதால் நாங்கள் உங்களை மீறிப் போய் விடுவோம் என்று சிறிதும் ஐயம் கொள்ள வேண்டாம், என்று கைமேல் அடித்துப் பெண்கள் சத்தியம் செய்து கொடுப்பது போல் இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது. "கொஞ்சம் தீ கோபஞ்செ22ல் அஞ்சேைவனம் -னங்கள் குற்றம் பொறுக்கச் செ7ன்2ைக் கெஞர்கிடுவோம்