பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷணன 181 “பெண்ணே, நீ அச்சத்தை விட்டொழி, ஒராணுக்காக உன்னைப் பொம்மை போல் அலங்கரித்துக் கொள்ள ஒருநாளும் உடன்படாதே!” என்று அறிவுரைகள் நல்கிய காந்தியடிகள் பெண் கல்வியைக் குறித்து என்ன கருத்துத் தெரிவிக்கிறார் என்ற ஆவல் உண்டாகிறதல்லவா? பெண் கல்வியைத் திட்டமிடும்போது, ஒர் உண்மையை மனதில் கொள்ள வேண்டும். ஆண் வீட்டுக்கு வெளியே தம்பதியின் புற உலகில், உன்னதமாகக் கருதப்பட வேண்டியவன் (Supreme). எனவே அதற்குத் தகுந்தாற் போன்று, அவனுக்கு அதிகமான கல்வியும் ஞானமும் அளிக்கப்பட வேண்டும். வீட்டு உலகம்-மனையியல் பெண்ணுக்கே உரியது. வீட்டை நிருவகிக்க, குழந்தைகளைப் பெற்று வளர்க்கக்கூடிய கல்வி அவளுக்கு அளிக்க வேண்டும் பெண்களுக்கென்று ஏற்படுத்தப்படும் கல்விக் கூடங்களில் ஆங்கிலக் கல்வி தேவையில்லை. ஆணும் பெண்ணும் சமமானவர்கள் தாம்; ஆனாலும் அவர்கள் தத்தம் இயல்புகள் முழுமையாகப் பரிணமிக்க கல்வி ஒரே மாதிரி இருத்தலாகாது என்று மேலும் உரைக்கிறார். தேசத்தந்தை. நமக்கு ஏதோ விளக்கெண்ணெய் நாவில் பட்டாற்போல் இல்லை? இவளுடைய முழுத்திறமையும் அறிவும் ஆற்றலும், ஆணுக்கு உதவியாக, சமைத்துப் போட்டு, பணி செய்து வீட்டைப் பேணி, குழந்தைகளைப் பார்த்து...எந்த முரண்பாட்டிலும் விட்டுக் கொடுத்து, தலைவணங்கி, பொருளாதார உற்பத்தி உரிமை எல்லாம் அவனுக்கே யாக்கி..இந்தக் கல்விதான் வலியுறுத்தப்படுகிறது. கொஞ்சம் மாறுதலாக, விடுதலைக் காற்றை நாம் பாரதியின் வரிகளில்தான் சுவாசிக்க முடிகிறது.