பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 183 உயிரோட்ட நாயகியாகத் திகழ்பவள் பெண்ணே. ஆதிப்பீடத்தில் இருந்து அடுக்களைச் சிறைக்குள் வந்த நாளிலேயே பொருளாதார உரிமை பறி போயிற்று. இவள் சார்ந்த கொம்பே, முட்களாக மாறி இவளைக் குலைத்ததையும் ஏற்றாள். சாத்திரங்களும், மரபுகளும், கலைகளும் காவி யங்களும், இவளைப் பூச்சியாகப் பதப்படுத்தவே உருவாக்கப் பட்டன. காலந்தோறும் என்ற நூற்றாண்டுகளின் பயணத்தில், இவளுடைய தெளிவான பார்வையே, மரபுகளின் மைப்பூச்சில் தன் சிறையிருக்கிறதெனலாம். சிறைச்சுவர்கள் என்று தெரியாமலே அதன் வண்ணங்களில் மயங்கிப் போகிறாள். “கற்பு நெறி எனக்கு மட்டுந்தானா?” என்று பாரதி என்ற மாகவிஞன் சொல்லிக் கொடுத்தும் கேட்கத் தெரியவில்லை. அலுவலகத்து மேலாளனுக்குப் புகைக் குச்சி பற்ற வைத்து, உடலழகு தெரிய நடந்து பேசி, வாணிபச் சரக்கோடு சரக்காக அதன் மதிப்பைக் கூட்டி, பெற்ற ஊதியத்தைக் கணவனுக்குக் குடிக்கக் கொடுப்பதினால் கற்பரசியாக இருப்பதாக எண்ணுகிறாள். ஒழுக்கத்துக்கு அப்பால் வந்துவிட்ட கருவைத் தன்னுடைய மாசாக ஏற்றுக்கொண்டு தீக்குளிக்கத் தயங்குவதில்லை. எஞ்சியதைச் சாப்பிடவே உழைக்க வேண்டும் என்று இயங்குகிறாள். அன்றாடம், பெண்ணின் பெருமை பேசப்படாத அரங்கு இல்லை. ஒ, பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எங்கும்.எல்லாத் துறைகளிலும்.