பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 காலந்தோறும் பெண் தொடர்புடைய மணம், கைம்பெண் சாத்திரம், சதி முதலிய கூறுகளை முக்கியமாகக் குறிப்பிடுகிறார். கற்பு என்று ஒரு நெறி, வலியுறுத்தப் பெறுகிறது. பெண்ணுக்கு மட்டுமே மாரி, பிடாரி எல்லையம்மன் என்ற சிறுபெண் தெய்வங்களனைத்தும் அந்தந்த இடத்தைச் சார்ந்த வரலாறுகள்-பல விவரங்களைத் தருகின்றன. குறிப்பாக, ரேணுகாதேவி அம்மன், மாரியின் அம்சமாகக் கருதப்படுகிறாள். கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் கந்தருவன் என்றும், ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகா அவனைப் பார்த்து மனம் தடுமாறினாளென்றும் அதனால் மணலால் லிங்கம் பிடித்துப் பூசை செய்ய முடியாமல் கற்பு நெறி குலைந்ததால், ஜமதக்கினி முனிவர் வெகுண்டு, தனயன் பரசுராமனை அவள் சிரம் துணிக்கச் சொன்னாரென்றும் பரசுராமன் தந்தை சொல்லேற்றுத் தாயைக் கொன்றான் என்றும் கதை சொல்லப்படுகின்றது. தந்தையின் வாக்கை நிறைவேற்ற, பரசுராமன் தாயை கோடாரியால் வெட்டிக் கொன்றான். தந்தை மனமகிழ்ந்து வரம் கேட்கச் சொல்ல தனயன் வரம்பெற்றுத் தாயை எழுப்பினான் என்பது வரலாறு. இந்தக் கதையில் முக்கிய நெறியாகிய கற்பும், தந்தைதான் பெரியவர் என்ற நீதியும் வலியுறுத்தப்படுகின்றன. ரேணுகை, தாய்ச் சம்பிரதாயக் கன்னியாக, சுதந்தரமாகக் கார்த்த வீரியார்ச்சுனன் என்ற கூடித்திரியனை விரும்பி இருக்கலாம். பெண்ணின் விருப்பமே இங்கு பறிக்கப்படுகிறது. முனிவராகிய அந்தணருக்கு மனையாட்டி என்றால், ஒடுக்கப்பட்ட துறவு வாழ்க்கை முனிவர்கள் பல பெண்களைக் கூடலாம். ஆனால் முனிபத்தினிக்குக் கற்பு உயிரைக் காட்டிலும் பெரிதும் பெரிது. எனவே தலை துண்டிக்கப்