பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 189 இத்தெய்வ வழிபாடுகள் அணிமைக் காலங்களில் செல்வாக்குடன் பரவி வருவதைக் காண்கிறோம். இந்த வழிபாட்டில், அதிகமாகப் பங்கு பெறுபவர் பெண்களே. கூட்டம் கூட்டமாகப் பெண் மக்கள் குழுமுகிறார்கள். புகழ்பெற்ற தேசியத் தலைநகரில் உள்ள கோயில் துர்க்கையம்மனுக்கு இராகுகால அபிஷேகம். குடம் குடமாகப் பால் வந்திறங்கி ஒரு வெண்மைப் புரட்சியையே, நீர்க்கால்களில் அவிழ்த்து விடுகிறது. அணியணியாகப் பெண்கள், கன்னியர், வந்த வண்ணமிருக்கிறார்கள். இக்கன்னியர், எலல்வார்-கமீஸ், அணிந்து வருகிறார்கள்; தாய் மொழியில் பேசுவதைக் கூட அநாகரிகமாகக் கருதுகிறார்கள். இவர்கள் ஸ்டெதஸ்கோப் பிடிப்பவர்களாக இருக்கலாம், காரோட்டலாம்; பேனா பிடிக்கலாம், ஆணையிடும் அதிகார பதவியைப் பெற்றிருக்கலாம். நீதிமன்றங்களில் வழக்காடு பவர்களாக இருக்கலாம். இங்கே வரும் வருக்கத்தினர் அனைவரும், சமுதாய அளவில் முன்னணியில் நிற்பவர்களே. ஆனால் இந்தப் பெண்கள், எலுமிச்சம்பழத்தைக் கொண்டுவந்து மூடிகளாக்கி, சாற்றைக் கல்லில் பிழிந்துவிட்டுக் கிண்ணம்போல் திருப்பி, கையில் கொண்டுவந்த குப்பி நெய்யை அதில் கவிழ்த்து, திரி போட்டு துர்க்கை சந்நிதியில் விளக்கு ஏற்றிவிட்டு மூன்றோ ஐந்தோ சுற்றுக்கள் சுற்றி விட்டும் போகிறார்கள். ஏன்? பிரார்த்தனை. கருமாரி கோவிலிலோ, மாங்காட்டு அன்னையின் கோவிலிலோ ஞாயிற்றுக்கிழமைப் பேருந்தகளில் வந்து குவியும் கன்னியரோ, தாயரோ ஏராளம். இவர்கள் அனைவரும் இந்த உக்கிர தேவிகளை வழிபடுவதற்குரிய பிரார்த்தனை எதுவாக இருக்கும்? தாயே, உனது கடாட்சம், என் துணிவுக்கு ஆதரவாக இருக்கட்டும், என்று கேட்கிறார்களா? உனது வீரியத்தை,