பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காலந்தோறும் பெண் பெண் ஆணின் வீட்டுக்கு வந்து தங்கிவிடுதல் ஒரு முறையாக வும் இருக்கின்றன. ஆண் பெண்ணின் வீட்டுக்கு வர, பெண் கணவன் வீட்டுக்குப் போகமாட்டாள். இது தாயர் முதன்மை இடம் பெறும் அமைப்புக் குடும்பங்கள். திருமணம் என்ற சொல்லே அதிகப்படியாக இருந்த காலத்தில், ஒரு குழுவைச் சேர்ந்த ஆண் இன்னொரு குழுவைச் சேர்ந்த பெண்ணை வரித்தால், சாதாரணமாக அக்குழுப் பெண்கள் அனைவருடனும் அவர் தொடர்பு கொள்ளும் மணமுறை வழக்காயிற்று. இவ்வாறே, ஆண்கள் பலரும் வரிக்கும் மாற்றுக்குழுப் பெண்ணுடன் நேர்கோட்டு, நியதி பிறந்திராத காலத்தில் இதைப் பலதார மணவழக்கு அல்லது பலநாயகர் மணவழக்கு என்று பெயரிட்டு வழங்குவதற்கில்லை. ஒரு குழுவுக்குள்ளே கலப்புக்கள், நன்மையானவை அல்ல என்று தெளிந்து கண்ட நாகரிக முன்னேற்றம் பல வேறு குழுக்களின் சம்பந்தத் தொடர்புகளாக மாற்றம் பெற்றன. இந்த மாற்றத்திலும், ஆணே, பெண்ணைத் தேடி வருவதாக இருந்திருக்கிறது. நீலகிரிப் பழங்குடியினரிடையே, மிக அண்மைக் காலம் வரையிலும், திருமணத்துக்குப் பெண் கேட்கச் செல்கையில், பணம் அல்லது பொன் கொண்டு செல்வதும், அப்படிக் கொண்டுவந்த பெண், வந்த குடும்பத்துச் சகோதரர்கள் எவரை விரும்பினாலும் சம்பந்தம் செய்து கொள்வதும் முறையாக இருந்தது. ஏழையாக இருக்கும் இளைஞன், பெண் வீட்டோடு வந்து இருந்து, அவர்கள் குடும்பத்துக்குரியவனாகவே உழைப்பான். சில ஆண்டுகள் இவ்வாறு கழிந்ததும், பெண்ணை மணந்து கொள்ளுவதற்குரியவனாகிறான். அஸாம் பிரதேசத்துப் பழங்குடியினரிடையே, இத்தகைய மரபுகளின் சுவடுகள் இன்னும் மறைந்து விடவில்லை.