பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிறகா ? பொன்கூண்டா? அணிமையில் இளந்தோழி ஒருத்தியைச் சந்தித்தேன். மருத்துவக் கல்வியை முடித்து கிராமம் ஒன்றில் பயிற்சிப் பணி ஆற்றினாள். மிகுந்த ஆர்வமும் ஆவலுமாகக் கிராமப்பணி அநுபவங்களை என்னிடம் எடுத்துரைத்தாள். பால்வினை நோயுடன் வரும் கிராமத்து ஆணாதிக்க வருக்கங்களைப் பற்றிச் சொல்கையில், அவர்கள் நாவிலிருந்தே உண்மையை வரவழைக்கும் யுக்திகளைப் பற்றி விவரித்தாள். அவளுக்கு உள்ளுற ஒரே வெற்றிக் களிப்பு. அதே சமயத்தில் எளிய மனைவி மக்களின் தீராத பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுவதைக் கூறுகையில் முகத்தின் ஆழ்ந்த ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. மனித வாழ்க்கையின் ஜீவாதார உரிமைகளில் குறுக்கிட்டு, கட்டுப்பாட்டை வலியுறுத்தும் போதுகூட ஆணைவிடப் பெண்ணே அதிகமாகப் பாதிக்கப் பெறுவதை உணர்ந்து வருந்துகிறாள். இவளுக்கு கிராமங்களில் ஊன்றி மருத்துவப்பணி செய்யும் பேரார்வம் முகிழ்த்திருக்கிறது. இத்தொழிலை இலட்சியப்பணி செய்யப் பயன்படுத்த வேண்டும் என்று நிற்கிறாள். ஆனால்.(ஆனால் போட்டாக வேண்டி இருக்கிறது) இவள் பெற்றோர், குடும்பத்து மூத்தோர், இவள் எதிர்கால வாழ்க்கையின் முக்கியத்துவம் திருமணத்தை ஒட்டியதாகவே இருப்பதாகக் கருதுகிறார்கள் கருதுதல்’ என்று சொல்வது கூடச் சரியில்லை. அதாவது, பெண்ணின் பிறந்த வீட்டுத் தொடர்பாகிய முதல் கட்ட, இரண்டாம் கட்ட வளர்ச்சிகளில் இறுதி நிகழ்வு, கோலாகலமாகிய திருமணம் தான். இந்தச் சோதனையில் அவள் வெற்றி பெற்றாக வேண்டும். சமூக மதிப்புகள் எந்த ஒரு பெண்ணுக்கும் ஆணைச் சார்ந்தே வந்து