பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 35 பொருள்......காண்ட்ராக்டாகப் பேசிவிட்ட நோட்டுக் கற்றையில்தான் மையம் கொள்கிறது. இந்நிலையில், இன்றைய பெண்கள் பத்திரிகை ஒன்றில் அஞ்ஞானிகளான பெண்களின் கேள்விகளுக்கு ஞான சூரியனாக, சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொண்டு, உலகாயதம் மிஞ்சிவிட்ட உலகுக்கு நல்வழி காட்டி வரும் சமயக் குரவராகிய அருள்மிகு சங்கராச்சாரிய சுவாமிகள், அருள்பாலிக்கும் பதில் ஒன்றைக் குறிப்பிட விழைகிறேன். அஞ்ஞானக் கேள்வி: பிற மதத்தினரிடையே பெண்கள், வேத நூல்களைப் படிப்பதற்குத் தடை இல்லையே. இந்து மதத்தில் மட்டும் பெண்கள் வேதங்களைப் படிக்கக்கூடாது என்றிருப்பது ஏன்? ஞான அருள் பதில்: வேதங்களில் உள்ள கருத்துக்களே புராணங்களில் இருக்கின்றன. நீங்கள் புராணக் கதைகளையும், நீதி நூல்களையும் பகவத் கீதையும் படிக்கலாமே?. "அம்மா நான் பால் குடிக்கக்கூடாதா? ஏனம்மா?” என்று அஞ்ஞானக் குழந்தை கேட்கிறது. "பாலிலிருந்து தானம்மா, இந்தப் புளித்த மோர் பிறந்தது! இந்த நீராகாரத்தில் மோரின் சுவை உண்டு. கடுகு, கறிவேப்பிலை உப்பு எல்லாம் உண்டு. உனக்கு இதுவே நல்லதம்மா!” என்று தாய் பெண் குழந்தைக்கு ஒதுக்குவதைப் போலில்லை? அப்படி, அந்த வேதத்தில் பெண்கள் படிக்க முடியாதது, கூடாதது என்ன இருக்கிறது? எதற்காக இப்படித் தடை பெண்ணுக்கு விதிக்கப்பட்டது? பார்க்க வேண்டாமா? 5. சுதந்திரத் தாய்-கற்பு விலங்கு கிTனகச் சூழல். அவள் கணவன் அவள் மடியில் தலையை வைத்துக் கண்ணயருகிறான். உறங்கி விழித்து எழுந்து பிஞ்சுக் குழந்தை தவழ்ந்து தணலாய்க் கிடக்கும்