பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காலந்தோறும் பெண் இவளே எசமானி, என்றெல்லாம் வேதகால கவிஞர் அதிதியைப் பாடிப் பரவுகின்றனர். கீழை நாட்டு அறிவுச் செல்வங்களையும் ஆன்மீகக் கருவூலங்களாகிய இலக்கியங்களையும் உலகுக்கு மீட்டுத் தந்த மாமுனி என்று போற்றப்படும் மாக்ஸ்முல்லர், அதிதியை வானுக்கும் மண்ணுக்கும் அப்பால் விரிந்த எல்லையற்று விளங்கும் ஒரு பொருளின் நற்பண்புகளுக்கும் ஆற்றலுக்கும் பண்டு பண்டு முன்னோர் உணர்ந்தளித்த தெய்வீக வடிவு என்று வியந்து கருத்துரைக்கிறார். இருளில்லாமல் ஒளியில்லை. இவளுக்குக் குளிர்மையும், ஒளிக்கு மாட்சி மையும் அவை ஒன்றுக்கொன்றாய் இருப்பதனாலேயே மேவுகின்றன. இவ்வகையில் திதி என்ற பெண் தெய்வமும் இரண்டு பாடல்களில் அதிதியுடன் குறிக்கப்படுகிறாள். இந்தக் குறிப்பில் இவள் எல்லை கடந்தவள் என்ற பொருளுக்கு மாறாகக் கட்டுப்படாத தாய்த் தன்மையின் சிறப்பு விளக்கமாகிறது. ஆனால் பிற்காலப் புராணங்களில், பெண்மைத் தத்துவத்தில் பிளவுகளைக் கற்பிக்க, இவளை அசுரர்களின் அன்னை என்றும் தீமைகளின் இருப்பிடம் என்றும், அதிதிக்கு இவள் விரோதி என்றும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறாள். அடுத்து ப்ருத்வி என்ற தேவதை போற்றப்படுகிறாள். ப்ருத்வி- இவளே மண்ணாகிய அன்னை. இவள் மடியில் மனிதர் கண் விழிக்கின்றனர். இவள் மார்பில் அமுதத்தை உண்டு, இவள்மீது தவழ்ந்து, ஒடி, ஆடி வளர்ந்து பல்வேறு மொழிகள் பேசிப் பல்கிப் பெருகுகின்றனர். மாந்தர், பூமி யை அண்டி, அவள் இதயம் சுரந்து தரும் வண்மைகளினால் வாழ்ந்து பெருகுவதை நன்றியுணர்வோடும் அளப்பரிய பாசத்தோடும் உன்னிக் கனிந்து பாடிப் பரவும் அற்புதப் பாக்களை, ப்ருத்வி ஸூக்தம் என்ற பகுதியில் காண்கிறோம்.