பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காலந்தோறும் பெண் அப்பிய கையை உடையவள் என்று பொருள். இவள் வெண்ணெயை இட்டு, அக்கினியை வளர்க்கும் மாண்பினள். இவள் அக்கினி தேவனின் அன்னை என்று புகழப்படுகிறாள். ஸ்ரஸ்வதி, கசடுகளையும், தீய மலங்களையும் போக்கி ஞான வெள்ளமாகப் பரவும் தெய்வ வடிவினள். அறிவு, விவேகம், சாதுரியம், கற்பனைவளம், படைப்புத்திறன், புதிய கண்டுபிடிப்புக்கள், நுண்கலைகள் ஆகிய அனைத்து மனித ஆற்றல்களையும் பாதுகாத்து நலம் பயக்கும் ஞான தேவதை இவள். குருக்ஷேத்திரத்தில் பாயும் ஆற்றை ஸ்ரஸ்வதி என்ற பெயரால் குறிப்பதற்குப் பாயும் ஞான வெள்ளமாக இவளை உருவகப்படுத்தியிருப்பதாகவும், அந்நதிக் கரையில் தம் வேள்விகளையும் பிற சடங்குகளையும் செய்வதற்கு ஆதி ஆரியர் சேர்ந்தனர் என்ற குறிப்பும் புலப்படுகிறது. பிற்காலங்களில் இந்தச் சிறப்பு, கங்கையும் யமுனையும் கூடும் புனிதத் திரிவேணிக்கு இசைந்தது. பாரதி இவள் நாவன்மைக்கு நல்தேவதை. ஒலி மலர்ச் சரங்களாய் கவிதைகள் இவள். அருளாலேயே பிறக்கின்றன. எழுத்து வரிவடிவம் இல்லாத காலத்து, ஒலிகளின் நிகரற்ற ஆற்றலைப் பாகுபடுத்தி ஆயிரமாயிரமாய் அற்புதக் கவிதைகளை வடித்த ருக்வேத காலச் சான்றோர், இவ்வாறு ஒரு தெய்வத்தை உருவகப்படுத்திக் கொண்டதில் வியப்பு எதுவும் இல்லை. இலா-ஸ்ரஸ்வதி-பாரதி ஆகிய மூன்று தேவதைகள், வாக்' தேவியின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கும் வடிவினரேயாம். ருக்வேதம் விளக்கும் மணப்பெண்ணாக, சூர்யா என்னும் தேவதையை அறிகிறோம். ஆதவனின் ஒளிக் காரணமாகிய தேவதைக்கு இப்பெயரைச் சூட்டி, இவளைச் சந்திரனாகிய ஸோமனக்கு மண முடிப்பதாகப் பாடல் வருகிறது. அகவினி தேவர்களாகிய இரட்டையர் மணமகனின் தோழனாகவும் அதே சமயம், சுயம்பரத்துக்கான போட்டியில் தேரோட்டி வென்ற