பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்தப் புத்தகம்

ரு படைப்பாளி தன் சமூகப் பொறுப்பை உணர்ந்து தான் சொல்ல விரும்பிய கருத்தின் வீச்சுக்கேற்ப படைப்பு வடிவை நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என உருவாக்கிக்கொள்கிறான்.

காலங்காலமாக மரபு வழி பின்பற்றப்பட்டு வந்த பெண் பற்றிய சிந்தனைகளை, செயற்பாடுகளை இங்கு ஆய்வுக் கட்டுரை வடிவில் அலசி ஆராய்கிறார் திருமதி ராஜம் கிருஷ்ணன்.

'பெண் சுதந்திரம்' பற்றிப் பரவலாக மேடைதோறும் உச்ச தொனியில் பேசப்பட்டு வரும் இந்நாளில் ஆழமான பார்வையில் படைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். “இலட்சியப்பெண் ” இதழில் தொடரப்பட்ட இந்தக் கட்டுரைத் தொடரை முழுவதுமாக நூல் வடிவில் வடித்துத் தந்த ராஜம் கிருஷ்ணன் அவர்கட்கு எமது நன்றி.

உள் ஓவியங்களுடன் இந்நூல் வெளி வருவதற்கு உதவிய டாக்டர் ஜகதீசன், பாரதி ஆகியோருக்கும் நன்றி.

“இலட்சியப் பெண்" இதழில் வெளிவந்த தனது ஓவியங்களை இந்நூலில் பயன்படுத்திக்கொள்ள இசைவு தந்த ஓவியர் திரு. சந்துருவுக்கும் முகப்போவியம் வரைந்தளித்த ஓவியர் க. உமாவிற்கும் எமது நன்றி.

அகிலன் கண்ணன்
தாகம்