பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம கருஷணன் 49 அவற்றின் பயனான சமுதாய வளர்ச்சி என்ற எல்லாப் பிரிவுகளிலும் பெண்ணை உருவகப்படுத்தி, பட்டைக் கண்ணாடியின் வாயிலாக அனைத்து வண்ணங்களையும் சிறப்பிக்கும் மாண்பாக, ஆதி ருக்வேதப் பாடல்கள் நமக்குப் பெண்மையை உணர்த்துகின்றன. இந்த உயர்கருத்துக்கள் எப்படி ஆட்டம் கண்டன? பெண்ணின் மாட்சியில் அவை எவ்வாறு ஊறு செய்ய நச்சுப் புழுக்களாகப் புகுந்தன? அனைத்து வண்ணங்களையும் எப்படி ஒரே கருப்பாய் மாற்றித் தொலைத்தது? அறிவுக்கண் இருந்தால்தானே இப்படித் தூண்டித் துளைப்பீர்கள்? பெட்டை. பெட்டையாகவே இருந்து தொலையுங்கள்! 7. கல்வி-வாழ்க்கை விபத்து இருவரும் சகோதரிகள்தாம். ஒருத்தி பற்றாக்குறை வருவாயுடைய இடைநிலைக் குடும்பத்துத் தலைவியாக மூன்று குழந்தைகளுக்குத் தாயாக, தண்ணிர்த் தட்டுப்பாடுள்ள ஒட்டுக்குடித்தனம், ரேஷன் கடை க்யூவரிசை ஆணாதிக்க மனப்பான்மையுடைய அதிகாரம் செய்யும் கணவன், இவளையே வறுத்தெடுக்கும் அவன் பக்கத்து உறவுகாரர் என்று முளையில் கட்டிய செக்கு மாடாக உழைக்கிறாள். ஊட்டமான உணவுக்குப் பஞ்சம். நல்ல பண்டம் சமைத்தால் இவள்வரை மிஞ்சாது. எஞ்சியவற்றைப் போட்டு வயிற்றை நிரப்ப வேண்டும். ஆனாலும் மஞ்சட்குங்கும மங்கல செளபாக்யம் இவளுடைய ஒரே உயிரிப்பு. அதை எண்ணி, மங்கலியத்தைக் கண்களில் ஒத்திக்கொண்டு, மற்ற வசதிகள், தேவைகள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறாள்; புறக்கணிக்கிறாள்; தியாகம் செய்கிறாள். கா.பெ. - 4