பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காலந்தோறும் பெண் அடுத்த சகோதரி, இளமையில் அந்தப் பாக்கியத்தை இழந்து விட்டாள். அதனால் அவளுக்கு, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, ஆசிரியப் பயிற்சி கிடைத்தது. பள்ளி ஆசிரியையாகி விட்டாள். பொருளியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் மதிக்கப் பெறுகிறாள்; பிக்குப்பிடுங்கல் இல்லை, மங்கலமில்லாக் குறையும்கூட, இந்த மதிப்புகளில் கூர்மை இழந்துவிட்டன. குழந்தைகள் கூட, "பெரியம்மா, சாக்லெட் வாங்கித் தருவாள்” என்று அவளை அண்டி அன்பு காட்டுகின்றன, கணவனும்கூடத் தன் அதிகாரச் செருக்கை மறந்து, பல்லிளித்து, நாற்காலியைக் காட்டி உபசரிக்கிறான். தங்கைக்கு உள்ளுறக் குமுறலாக இருக்கிறது. ‘என்னையும் படிக்க வச்சிருந்தா படிச்சிருப்பேன். இப்படி வேலை செய்து சம்பாதிப்பேன். இந்தக் கல்யாணம் இல்லைன்னு அழுதேனா..?’ என்று ஒவ்வொரு சமயங்களில் நினைக்கிறாள். குழந்தை மணக் கொடுமைகளுக்கு மாற்றாக, பெண்ணுக்குக் கல்வி, பொருளாதாரம் சார்ந்த சுய வாழ்வு என்ற சீர்திருத்தங்கள் வந்தன. பெண் கல்வி என்பது, வாழ்க்கையில் விபத்து நேர்ந்தால் மட்டுமே அநுமதிக்கக் கூடியதாக இருந்தது. கல்வி, அவள் அறிவு மலர்ச்சிக்கு வாய்ப்பளித்து, வாழ்க்கையின் பலனாகப் பல சமுதாயச் சிக்கல்களை ஒர்ந்து முழுமை காண வேண்டும் என்றோ, அறிவின் தேட்டத்தில் ஒரு பெரிய கண்டுபிடிப்பையோ, சாதனையையோ நிகழ்த்த வேண்டும் என்றோ எந்தக் கருத்துக்கும் இடமில்லை. ஒர் ஆணைச் சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு, அண்டி, ஊழியம் செய்து, மஞ்சட்குங்குமப் போர்வையில் தன்னைக் கரைக்கும் வாழ்க்கைக்கு ஊறு வந்தால், நெருப்பில் எரியாமல், முண்டித அலங்கோலங்களில் குத்துப்பட்டு முடக்கப்படாமல், கல்வி கற்று, வயிற்றைக்