பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 51 கழுவிக் கொள்ளலாம் என்பது, அந்த வரையில் மிகப் பெரிய ஆறுதல்கள் அன்றோ? இந்நாட்களில் பொருளாதாரத் தேவையை முன்னிட்டு பெண் எவ்வகையிலேனும் பொருளிட்டும் தகுதியையும் பெற வேண்டும் என்ற குறிக்கோளில்தான் பொதுவாகவே பெண் கல்வி பரவலாக்கப்பட்டு வருகிறது. “கல்லூரியில் பெண்ணைச் சேர்க்கவில்லையா?” என்று கேட்டால், “இல்லை, கல்யாணம் செய்து கொடுத்துவிடுவதாக இருக்கிறோம்” என்ற விடை வரும். இப்போதோ, ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள், கல்யாணமாவதற்கென்றே உயர் கல்விக்கு அலைய வேண்டி இருக்கிறது. “பெண் வங்கியில் வேலை செய்கிறாள்.அதனால் பல வசதிகள் உண்டு” என்ற அவள் மதிப்பு, வெளிப்படையாக, அந்த வேலைத் தகுதியில் மட்டுமே ஒட்டி, அவளை ஒன்று மில்லாமல் ஆக்கிவிடுகிறது. முந்நாட்களில், உலகெங்கினும் நிலவிய அடிமைச் சந்தை முறை தமிழ்நாட்டிலும் இருந்ததற்குச் சான்றாக, பல கல்வெட்டுக்களும் சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. ‘கொள்வாருளரோ, கொள்வாருளரோ என்று அடிமையின் பெயரையும் தகுதியையும் பகிரங்கமாகக் கூறி வாங்கு பவர்களை அழைப்பார்களாம். இந்த முறை அடிமைச் சந்தையில் பெண் அடிமைகள்தாம் அதிகமாக விற்பனைக்கு உரியவர்களாக வருவது வழக்கமாக இருந்ததாகவும் தெரிய வருகிறது. ‘கொள்வோம்!” “கொள்வோம்!” என்று வாங்குபவர் கூவிக்கொண்டு அறிவிக்க விலை நிர்ணயம் செய்யும் நல்லவர் குறுக்கிட்டு வாணிபப் பேரத்தை முடித்தார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால் இந்நாட்களில் இந்த வாணிபம் மேல்