பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 * காலந்தோறும் பெண் என்ற வகையில் பெண்ணைக் கொள்வாருக்கு மேலும் பொருள் கொடுக்கும் முறை உயர்ந்து போயிருக்கிறது. அத்துடன் பெண்ணின் பொருளாதாரம் சார்ந்த கல்வித் தகுதி உயர உயர, அதே வகையிலும் மேலும் ஏற்றம் பெற்ற ஆணே இவளை அடிமை கொள்ள முடியும் என்ற நிலையில், மேலும் மதிப்பிழந்து போகிறாள் பெண். வேத காலத்தில் பெண்ணுக்குக் கல்வி பயிற்றப்பட்டது, அது எத்தகைய கல்வி: உபநயனம் என்ற சடங்குடன் அந்நாளையக் கல்விப் பயிற்சி-அறிவைத் தேடும் பருவம் ஆரம்பமாகிறது. உபநயனம் என்ற சொல்லுக்கு, இன்னொரு கண்ணைக் கொடுத்தல் என்ற பொருளையும், அறிவினால் மேலும் மேலும் கூர்ந்து காணும் நோக்கில் அழைத்துச் செல்லல் என்ற பொருளையும் கூறுகிறார்கள். ஒரு மேலாம் குருவை நாடி, மாணவ-மாணவியர் தமக்கு அறிவொளியைத் தந்து வாழ்வாங்கு வாழக்கூடிய எல்லா நலன்களையும் அளிக்கும் கல்வியைப் பயிற்றியருள வேண்டும் என்று வேண்டுவதும், குரு சீடரை மனமுவந்து ஏற்று, ஒளியூட்டும் 'காயத்ரி மந்திரத்தை முதன்முதலாக உச்சரிக்கச் செய்து, குருகுலவாசமாகிய வாழ்வை விதிப்பது மட்டுமே அந்நாட்களில் நடைபெற்ற உபநயனச் சடங்காகும். ஆதி வழக்கில் முப்புரிநூல் பற்றிய பேச்சே இல்லை. இந்தக் கல்வி பயிற்றுமுறை தொன்மைக்கால ஆரியக் குடும்பங்களில், பயிற்று இருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. தாயும்கூட இதற்குத் தகுதியுள்ளவளாக இருந்தாள். எனவே ஒவ்வொரு குடும்பமும், கல்வியளிக்கும் நிறுவனமாக இயங்கியிருக்கலாம் என்பதையும் அறுதியாக மறுப்பதற்கில்லை. வேத கால ஆரியர் இந்தியாவில் வந்து ஊன்றிய காலங்களில், கானக விலங்குகளுடன் மட்டுமின்றி, பல்வேறு இனத்தாருடனும் தங்களுக்குள்ளேயே-குழுக்களுடனும்