பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 53 போராட வேண்டி இருந்தது. இதன் காரணமாகப் பெண்கள் மொழியும் இலக்கியமும் மட்டுமின்றி, போரிடும் கலையையும் பயின்றார்கள். ருக்வேதக் கவிஞர் வரிசையில் பல பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. கோசா, லோபமுத்ரா (அகத்தியரின் மனைவி) அபலா, ஸஅர்யா, இந்திராணி, யமி, என்று நீண்டு செல்லும் பட்டியலில், இக்கட்டுரைத் தொடர்களில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள தேவதைகளின் பெயர்களும் அடங்குகின்றன. இது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாகப் படவில்லை. எனவே, பெண் ரிஷிகளே யாத்தவை, கணவராகிய ருவியுடன் கூட்டாக யாத்தவை, பெண்களின் பெயரில், தெய்வங்களே யாத்த நிலையில், பிறர் பாடியிருக்கக் கூடியவை என்று பிரிக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், ருக்வேத காலத் துவக்கத்தில், கல்வியறிவு பெண்களுக்கு மிக உயர்ந்த நிலையில் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டிருந்ததெனத் தெளிவாகிறது. போர்க்கலையில் சிறந்து விளங்கிய பெண்களைப் பற்றியும் ருக்வேதப் பாடல்களின் வாயிலாக அறிகிறோம். கேல அரசனின் மனைவி விஸ்பலா கணவனுக்கு உதவியாக எதிரிகளைத் தாக்கிக் கடும்போர் புரிந்ததில், ஒரு காலை இழக்க வேண்டியதாயிற்று. அசுவினி தேவர்களின் அருளால், இரும்புக் காலைப் பொருத்திக்கொண்டு மீண்டும் பகைவருக்கு யமனாக நின்றாளாம். முத்கலானி என்ற பெண்மணி முத்கலரின் மனைவி. இவளும் போர்க்களத்தில் வீரப்போர் புரிந்த செய்திகள் காணக் கிடக்கின்றன. காற்றில் மேலாடை வீசிப் பறக்க அம்புகளைச் சரமாரியாகப் பொழிந்து, தோற்றோடும் பகைவர் கதிகலங்கத் துரத்திச் சென்றதும், கொன்று குவித்ததும் வருணிக்கப்படுகிறது.