பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சநாதனத்தின் முரண்பாடுகள் ெெ - - m - + - வள் என் அண்ணா பெண் மாமி, ஆசீர்வாதம் יין பண்ணுங்கள்! சுப்பு, நமஸ்காரம் பண்ணு நான் கண்ணிமைக்க மறந்து அந்தச் சிறுமியையே பார்த்தேன். பன்னிரண்டு வயது இருக்குமா இவளுக்கு? பாவாடை சட்டையணிந்த அச்சிறுமி கழுத்திலிருந்த பவளமாலை, சங்கிலி மற்றும் தொங்கும் தாலிக்கயிறு எல்லாம் தரையில் படிய நிலத்தில் விழுந்து வணங்கினாள். “...இவளுக்குக் கல்யாணமாயிட்டுதா وهي எனக்கு வார்த்தைகளே நெஞ்சில் சிக்கிக்கொண்டன. சிறுமியைக் கூட்டிவந்த அவள் தமக்கை புரிந்துகொண்டிருக்க வேண்டும். “போன தை மாசம் கல்யாணமாச்சு. எங்க வீட்டில் ரொம்ப வைதீகம். எனக்கும் இவளைப்போல் வயசில்தான் கல்யாணம் நடந்தது. கெளரி பிறந்தப்ப எனக்குப் பதினஞ்சு வயது. ராமன் பதினேழு வயசிலே பிறந்தான். டென்த் பரீட்சை அப்புறம்தான் எழுதினேன்.” தெருவில் குடியிருக்கும் பெண் என்று அவளைத் தெரியும் இடுப்பில் பையனையும், கைவிரலில் பெண்ணையும் கோர்த்துக் கொண்டு நர்சரிப் பள்ளி ஆசிரியையாக அவள் தெருவில் செல்கையில் என்னைப் பார்த்துப் புன்னகை என்றாள். ஒரே பூப்பாள். நானும் புன்னகையுடன் தலையசை ப்பேன். சில நாட்களில் மாலை நேரங்களில் இளைஞனான கணவன் சைக்கிளில் உட்கார்ந்து ஒட்ட முன்னே பெண்ணும் பின் இருக்கையில் இவள் பையனையும் வைத்துக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். =