பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காலந்தோறும் பெண் அவசரமாக இட்டுக்கொண்டு தங்கை பெண்ணுடன் விரைந்தாள். தெருவில் கழுத்தில் தாலி தொங்கச் செல்லும் சிறுமி அதைப் பற்றிய உணர்வுடன் நடந்ததாகத் தெரிய வில்லை. ஆனால், குலாசாரம் மீட்கும் அவசியத்தை அறிவுறுத்த இந்தப் பெண்கள், ஒன்பது கஜமும் ஆசாரிய மடமும் நெறிகளாகக் கொண்ட சில பெருமாட்டிகளுக்குத் து.ாண்டுகோல்களானார்கள். 'இதுதான் கண்ணுக்கு லட்சணமாயிருக்கு, தெம்மாடி களாட்டம் பொங்கள வளர்த்து வச்சிண்டு கண்டமானிக்கும் டிரஸ்ஸைப் போட்டு வேலைக்கு அனுப்பறா. அதிது அநாகரிமா கண்டவனையும் இழுத்துண்டு போறது. எப்ப கல்யாணத்தைத் தள்ளிப் போட்டாளோ, அப்பவே ஆசாரம் போச்சு!” தருமம் நிலைநாட்ட திமுதிமுவென்று வளர்ச்சியடையும் பெண்களைப் பிடித்திழுத்து, ஒன்பது கஜத்தைச் சுற்றி உட்கார வைத்து, ஒருவன் கையில், கயிற்றைக் கொடுத்துக் கட்டுடா என்று சொல்ல படைபடையாக எல்லாரும் கிளம்பவேண்டும் என்று அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள். தஞ்சாவூர் நந்தியைப் பற்றிச் சிறுவயசில் நான் ஒரு கதை கேட்டதுண்டு. கல்லால் பணித்த நந்திகேசுவரர் வளர்ந்து கொண்டே போனாராம், வளர்ந்து வளர்ந்து மண்டபக் கூரையை முட்டிக்கொண்டு உடைத்து விடுவார்போல, அப்போது இறைவன் சிற்பியின் கனவில் வந்து ஒர் உபாயம் சொன்னாராம். அதன்படி இரண்டு கொம்புக்கும் நடுவில் நெற்றிப்பொட்டில் ஒர் ஆணியை வைத்து இறுக்க, நந்தி குறைந்துகொண்டே வந்து நிலைத்ததாம். எனக்கு அந்தக் கதை நினைவுக்கு வந்தது. அறிவு, திறமை, ஆளுமை, ஆற்றல் இதெல்லாம் பெண்ணுக்கு வளர்ந்தால் அவளுக்கென்று தனித்த சிந்தனை,