பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 59 தன்னுணர்வு மிகுதியாகும். நம்பிக்கை எல்லாம் வந்து விடுமோ? எனவே, உடல் வளர்ச்சியுடன் ஏனைய இதய அறிவுமலர்ச்சிகள் எய்திவிடாமல், உடல் பரமாகவே அவள் தன்னை இழந்துவிட வேண்டுமென்றால், இழுத்து வைத்து மனையில் உட்கார்த்தி, கல்யாணம், கற்பு, சம்சாரம் என்ற முக்கூட்டு ஆணியை பலமாக அவளுள் இறுக்கிவிட்டால் பிறகு அசைய முடியாதல்லவா? ஆனால், இந்த சநாதனத்துக்கு மறுபக்கம் என்ற ஒன்றை இவர்களால் நினைக்கவே முடிவதில்லை. சநாதன மரபு, பெண்ணைப் பன்னிரண்டு வயசில் கையில் குழந்தையைக் கொடுக்கும் தாயாக்கி, முப்பது வயசில் மூத்த கிழவியாக்கினாலும், புருஷன் அவளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். பொருளிட்ட அவளை வெளியே அனுப்பலாகாது என்று கருதியதே. அதைப் பற்றிய நினைவே அழிந்துவிட்டது. பெண் பொருளிட்டி வர எந்த வேடம் போட்டாலும் அது அனுமதிக்கப்படுகிறது. பொருள் மட்டும் அவளுக்கு உரிமையானதல்ல. அதற்காக அவள் பெற்ற மதலையையும் எவரிடமேனும் விட்டுச் செல்லலாம். பதிக்கேற்ற சதியாக அவன் சொல்லும் சுகமே தனது வாழ்க்கை இலட்சியங்களாக நடக்க வேண்டுமென்று சநாதன தருமத்துக்குப் புதிய பரிமாணங்களைக் கண்டிருக்கிறார்கள். உபநயனம் மறுக்கப் பெற்று அது சம்சாரப் பிணிப்புச் சடங்காக மாற்றப்பட்டதற்கு என்ன காரணம்? அந்த நெறி எப்போது எப்படித் தொடங்கப்பெற்றது? என்கிற ஆராய்வு எங்கெங்கோ நம்மை எட்டிப் பார்க்கச் செய்கிறது. வேதம் ஒதுவதும், வேள்வி புரிவதும், சமுதாய நன்மையை முன்னிட்டென்ற கருத்தில் மக்களில் ஒரு சாராரும், தோள்வலி பெருக்கி எதிரிகளாய் இன்னல் கொடுப்போரை எதிர்த்துப் போராடும் வலிமையுடன் இன்னொரு சாராருமாக