பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் . 61 ருக்வேதம் காட்டும் சான்றுகளில் இவ்வாறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதன் பிரதிபலிப்பு எதுவுமே இல்லை. ஆனால், ருக்வேதத்தில் பொதிந்துள்ள 'புருஷ ஸாக்தம்’ நான்கு வருணத்தவர்களைப் பற்றி விவரிக்கிறது. ஆதி புருஷனின் நெற்றியிலிருந்து முதல் வருணத்தவரும், தோள்களில் இருந்து இரண்டாம் வருணத்தவரும் தொடைகளில் இருந்து மூன்றாம் வருணத்தவரும், பாதங்களில் இருந்து நான்காம் வருணத்தவரும் உண்டாயினர் என்று கூறப்படுகிறது. முதல் வருணத்தவர் தன்னலமின்றி சமுதாய நலனுக்காக, பிரும்மத்தை வேட்கவும், வேதம் பயில்விக்கவும் வேள்விகள் நடத்தவும், உரிமை பெற்றவரென்றும், இரண்டாம் வருணத்தவர், தோள்வலி கொண்டு சமுதாயம் காக்க உரிமை கொண்டவரென்றும், மூன்றாம் வருணத்தவர் பொருள்வளம் கண்டு சமுதாயம் பேண உரிமை பெற்றவரென்றும், நான்காம் வருணத்தவர், முதல் மூன்று வருணத்தாருக்கும் ஊழியம் செய்வதே கடமையாகக் கொள்ள வேண்டும், வேறு எதற்கும் உரிமையற்றோர் என்றும் சமுதாயத்தில் பெரிய மானுடப் பிளவைத் தோற்றுவிக்கிறது. உபநயனம் மற்றும் உரிமைகள் மறுக்கப்படும் நிலைமை ஏற்படுகையில் பெண்ணும் நான்காம் வருணத்தவரின் இடத்தில் தள்ளப்பட்டாள். ருக்வேதம் காட்டும் சமுதாய உணர்வில், இந்தப் புருஷ ஸ்-க்தம் பாயசக் கல்லாகக் கடிபடுகிறது. “நான்காம் வருணத்தவர் யாவர்?’ இந்த வினாவை எழுப்பி அதற்கு விடையாக சமூக வரலாற்று அறிவியல் மேதையான டாக்டர் அம்பேத்கார் ஒர் அகன்ற, ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு, மிக ஆச்சரியமான சில கருத்துக்களை முன் வைத்துள்ளார். அது நம்முடைய பார்வைக்கு மிக இசைவாக உள்ளது. அதைக் கூர்ந்து பார்ப்போம்.