பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காலந்தோறும் பெண் வேதங்கள், உபநிடதம் மற்றும் கிராஹ்ய சூத்திரங்கள். ஜெண்டவஸ்தா முதலிய பல சமய நூல்களில் மூழ்கி அவர் முத்துக்களை அந்நூலில் தந்துள்ளார். அந்த முத்துக்களில் வீசும் இயல்பான ஒளியின் முன், மேலை நாட்டு ஆராய்ச்சியாளரின் கூற்றுக்களும் வேதம், பிரும்மம் என்று பகுத்து ஆராய இடம் கொடுக்காமல் அதில் சேர்ந்துள்ள எல்லா இடைச் செருகல்களையும், அறிவுக்குப் பொருந்தாப் புளுகுகளையும் அப்படியே கட்டித் துளசியையும் புனிதமாக்கிப் பாதுகாக்கும் உடைமைச் சமூகத்தினரின் வாதங்களும் பல்லினிக்கின்றன. நான்காம் வருணத்தவரும், பஞ்சமர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களும், இந்திய நாட்டில் ஏற்கனவே தங்கி அரசு அமைச்சு படை என்று நாகரிகமாக வாழ்ந்த இனத்தினர் அல்ல; அவர்கள் காடுகளில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளும் அல்ல; ஆரியர்கள் தங்கள் இனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் கருத்தாக இருந்தார்கள். அதனால் மற்ற இனத்தவரைத் தங்கள் சமுதாயத்தை விட்டு விலக்கி வைத்திருந்தனர் என்பதும் சரியல்ல. அவ்வாறானால் பன்னிரண்டு தலைமுறைகளைப் பாவனமாக்கும் வராட்யஸ்தோமம்’ போன்ற சடங்குகளுக்கு இடமில்லை. ருக் வேதத்தில் காணப்பெறும் ஒரு சான்று, ஆரியர் இந்தியாவில் ஏற்கனவே தங்கியிருந்த இனங்களுடன் சம்பந்தம் செய்துகொண்டதை விளக்குகிறது. ஆரியர் இவ்வினத்தாருடன் போர் புரிய நேர்ந்தபோது, போரில் வென்றாலும், தோற்றாலும் சமாதான சம்பந்தங்கள் செய்துகொண்டார்கள். முன்பே குறிப்பிட்டபடி ஆரியரல்லாத இந்த ஆதிச் சமுதாயத்தில் அடிமைகள்-குறிப்பாகப் பெண் அடிமைகள் இருந்தார்கள்.