பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 69 இந்த ஆய்வில், நமது புதிர்களுக்கும் சிறிது வெளிச்சம் தென்படுகின்றது. போர்களும், பழி வாங்கல்களும், பூண்டோடு குலமழிப்போம் என்ற சூளுரைகளும் வேதப் பாடல்களிலும், பின்னர் புராண மரபுகளிலும் தொடர்ந்து வருகின்றன. "பழி வாங்கின விளைவே, உபநயனம் செய்து வைக்க முன்னுரிமை பெற்றிருந்த முதல் வருணத்தாரை, இரண்டாம் வருணத்தவராக இருந்த ஒரு பிரிவினரான எதிரிகளுக்கு உபநயனம் செய்து வைப்பதில்லை என்று கட்டுப்பாடாக ஒதுங்கச் செய்தது என்ற முடிவை நூலாசிரியர் கொண்டு வருகிறார். - உபநயனம் இல்லையேல், வேதம் படிக்க, அறிவொளி பெறத் தகுதி இல்லாதவராகிறார். இதனால் வேள்விகளில் பங்கேற்பு இல்லாமலாகும். இதனால் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை கழன்றுபோகும். பிறகு அவர்கள் முன் னுரிமை பெற்ற மக்களுக்கு ஊழியம் செய்துதான் பிழைக்க வேண்டும். சமுதாயத்தின் ஒரு சாரார் காலப்போக்கில் அறிவுக் கண்களை இழந்து அடிமைத் தளைகளுக்கு உள்ளாயினர். இது தெரியாமலிருக்க, புதிய புதிய தரும சாஸ்திரங்கள். நீதி நெறிகள் எல்லாம் தெய்வீக முத்திரைகளுடன் பெருகலாயின. பழைய மாண்புகள் திருத்தப் பெற்றன. மூன்றுக்கு மேல் நான்காம் வருணமும், அதன்பின் பல்வேறு சாதிகளும், பஞ்சமர் என்ற ஐந்தாம் நிலை அதோ கதி வருணமும் தோன்ற வழிகள் ஏற்பட்டன. பெண்.இந்தச் சமுதாயச் சுழற்சிகளில் உயிரற்ற சுழற்சிக் காயாக மாற்றம் பெறலானாள். அவள் இத்தனை பிரிவுகளும் தோன்றக் காரணமாகவும் இருந்து அதே சமயம் தனக்குரிய மனித கெளரவத்தையும் இழந்தாள். எப்படி என்று பார்ப்போமே!