பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. குரு பீடங்கள் அம்மன் கோயில் விழா! மஞ்சள், சந்தனக் காப்புகள், மஞ்சளாடைகள், கொதிக்கும் வெயிலில் தீச்சட்டி துாக்கும் பக்தி வெறிகள், வேப்பிலை ஆடைகள் என்று தெருவே பிதுங்குகிறது. கோயிலில் அம்மனுக்கு மேல் அம்மனின் அருளை மனித உருவில் வழங்கும் சுவாமி இருக்கிறார். அவருடைய வேப்பிலை நீர் மேலே விழுந்ததும் பெண்கள் ஆவேசம் வந்து ஆடுகிறார்கள். குரு சுவாமிகள் வருகிறார். பெண்கள் படைபடையாக அருள் கேட்க பாதத்தில் விழுகிறார்கள். “கல்யாணமே கூடவில்லையே? என்ன செய்ய?’ என்று தாய்மார்கள் பரிதவிக்கிறார்கள். “ஆறு வாரம் இக்கோயிலில் மஞ்சள் சரட்டைக் கட்டு, கல்யாணம் ஆகும்!” என்று சுவாமி திருவாய் மலர்ந்து அட்சதை வழங்குகிறார். மகளுக்காகத் தாய் பக்தி சிரத்தையாக மஞ்சள் சரட்டைக் கொண்டுவந்து சந்நிதியில் கட்டுகிறார். “எலுமிச்சை ரசத்தைப் பிழிந்துவிட்டு, திருப்பி நெய்யூற்றி விளக்கேற்றுங்கள், கல்யாணமாகும்!”-இது இன்னொரு வருக்குப் பரிகாரம். ஒரு பெண்ணுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஆணுக்கும் உண்டு. கல்யாணம் என்பது அவளுக்கு மட்டுந்தான் அத்துணை கட்டாயமா என்று இவர்கள் கல்வியும் பொருளாதார சுதந்திரமும் நினைத்துப் பார்க்க ஊக்குவதில்லை. “இந்து சமுதா யத்தில் ஒரு பெண் கன்னியாக இருக்க உரிமை அனுமதியில்லை. அவள் கைம்பெண்ணாக