பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் ★ 71

இருக்கலாம். அதனால் உசிதமான வயதில் கல்யாணமாகாவிட்டால் ஒரு வாழை மரத்தைக் கணவனாக வரித்து மணமானவளாகத் தாலி தரித்துப் பின் மரத்தை வெட்டிவிட்டுக் கைம்மைக் கோலம் பூண்டு வாழ்வதே தரும சாஸ்திரம்” என்று சொல்லுமளவுக்குக் குரு சந்நிதானங்கள் இங்கே பெண்களிடையே ‘மதிப்பை’ பெற்று இருக்கின்றன. காவி தரித்துத் துறவறம் என்ற நிலையில், சமயம் பரிபாலிக்கும்


இந்தக் குரு பீடங்கள் உண்மையில் மக்களை வாழ வைக்கத் தான் உருவாயினவா? இதை ஆராயும்போது, பெண்ணின் வீழ்ச்சிப் பரிணாமத்தின் கூறுகளையும் பார்க்க முடிகிறது.