பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காலந்தோறும் பெண் பெண்ணுக்கு அறிவு வேண்டாம்; அவள் உடம்புதான் முக்கியம். அவள் மக்களைப் பெறுவதற்கே படைக்கப் படுகிறாள். அந்த அளவில் அவள் முக்கியத் துவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியங்கள், நான்கு வருணச் சமுதாயங்கள் தோன்றிய காலத்தில் ஏற்பட்டு விட்டன. உபநயனம் மறுக்கப்பட்டதும், அது தெரியாமல் இருக்க, அவளுள் மணவாழ்வின் மங்கலங்களும் சடங்குகளும் புதிய நெறிகளும் ஏற்றப்படுகின்றன. அறிவும், அழகும் இணைய, சுதந்திரமாக உலவி, வாழ்வின் மையமான ஒட்டத்தில் இருந்து ஒதுங்காமல், ஒர் ஆடவனை விரும்பிச் சேர்ந்து, மக்களைப் பெற்று வாழும் உரிமை ருக் வேதத்தில் வரும் பெண்களுக்கு இருந்திருக்கிறது. - திருமணச் சடங்குகளும், மந்திரங்களும் பெண்ணை முழு மனித வளர்ச்சி எய்தியவளாகவே காட்டுகின்றன. திருமணப் பிணைப்பில் இருவரும் ஒன்றுபடுகையில் கணவனுடைய தளையற்ற சுதந்திரமும் பிணிக்கப்படுவதாகவே குறிக்கப்படுகிறது. மணமகன் மணமகளை அணுகுமுன், கூறப்படும் சில மந்திரங்களும், சடங்குகளும் ருக் வேத காலத்தில், பருவமடைந்த பின்னரே பெண்களுக்குத் திருமணம் செய்யப்பட்டது என்பதை ஐயந்திரிபற விளக்குகின்றன. மணமகன் மணமகளை அணுகுமுன், அவள் உடலுக்கு அதுகாறும் பொறுப்பேற்றிருந்தவர்களாக நான்கு தேவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். சிறுமியாக பேதைப் பருவத்தில் 'வருணன் அவளுக்கு வளர்ச்சியைத் தருகிறான். ஸோமன் என்ற தேவனின் பொறுப்பில் அவள் பூப்பெய்தும் நலன் ஏற்படுகிறது. "அக்னி அவளுக்கு மலர்ச்சியும், தெளிவும், சக்தியும் நல்குகிறான். ‘விசுவாவசு என்ற தேவன் அவளை இறுதியாக உரியவளாக்கிக் கொண்டு மன்மதக் கலையின் இயல்புகளை உணர்த்துகிறானாம். எனவே, மணமகன், மணமகளை அணுகுமுன், இந்த விசுவாவசு தேவனைத் தொழுது, “இந்தக் கன்னியை மணம்