பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 73 புரிந்த நாயகன் வந்துவிட்டான். எனவே அவனுக்கு அவளை அளித்துவிட்டு, தந்தையின் இல்லத்தில் உள்ள வேறு ஒரு கன்னிகையை நீ அணுகுவாயாக!” என்று பொருள்படும் மந்திரவாசகம் சொல்லப்பட்டது. பெண்ணின் அருகில் ‘விசுவாவசு தேவனைக் குறிப்பாக்கும் ஒரு தடி (உலக்கை) போடப்பட்டிருக்கும். அடையாளமான அச்சின்னத்தை, இம் மந்திரத்துடன் மணமகன் விலக்குவான். இச்சடங்கு, ஒழுக்கம் என்ற பெயரில் பெண் எப்பொழுதும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை மேலும் மெய்ப்பிக்கிறது. ஒரு பெண்ணைத் தாயாகக் கருவுறச் செய்யும் உடல்பரமான முக்கிய நிகழ்ச்சிக்கு உடல் முதிர்ச்சியும் உள்ள மலர்ச்சிகளையும் நல்குபவர்கள் ஆண் தேவர்களாகவும் உருவகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்த மேன்மைகள், உபநயனம் மறுக்கப்பட்ட கையோடு கட்டாயமாக்கப்பட்ட திருமணத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக வீழ்த்தப் பெற்றன. உபநயனம் மறுக்கப் பட்டதால், வேதம் படிக்கத் தகுதியில்லை. வேத மந்திரங்களை உச்சரிக்கத் தகுதியிழந்ததால், வேள்விகளைச் செய்வதற்கும் உரிமையற்றவர்களாவார்கள். அக்காலத்துச் சொத்து உரிமை, வேள்விகளைச் செய்ய உரிமை பெற்றவருக்கே இருந்தது. அக்காலத்து உடமைகள், பெரும்பாலும் ஆடு-மாடுகள் குதிரைகளில்தான் நிலை கொண்டிருந்தன. நில உடமைச் சமுதாயம் பரவலாக வழக்கில் வரவில்லை எனலாம். ஆனால் போராட்டங்கள், நில உடமையின் காரணமாகவே நிகழ்ந்தன என்று கொள்ளலாம். பெண்களுக்கு உபநயனம் மறுக்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையும் இல்லாதவர்களாக ஒடுங்கினார்கள். இவ்வாறு பெண்களின் ஒடுக்கப்பட்ட பரம்பரை, சீராக இருட்டு மாயையையும் குருட்டுப் பழக்கங்களையும் வளர்க்க