பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 75 இந்த நம்பிக்கைகளின் மூலம் பெண்ணை இன்னும் ஆழக் குழியில் வீழ்த்திவிட முடிந்தது. மூளைச் சலவை செய்ய, குருபீடங்களுக்குப் பெண்களே உகந்தவர்களாயினர்! ருக்வேத காலத்தில், பெண் குழந்தைகளுக்காகத் தனிப்பட்ட வேள்வி செய்யப்படவில்லையெனினும், பெண் குழந்தைகள் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். மிக முக்கியமான பால் கறக்கும் உரிமையை அவள் பெற்றிருந்தாள். இதனால் பெண்ணின் பெயரே 'து ஹித-(பால் கறக்கும் உரிமை பெற்றவள்) என்று குறிக்கப்படுகிறது. ஆனால் ருக் வேதத்திற்குப் பிற்பட்ட அதர்வ வேதத்தில் தான், சடங்குகள், நெறிப்படுத்தப்படும் விவரங்களைக் காண்கிறோம். 'ருக் வேத காலத்தில் 'ஸ்திரி’ என்ற சொல்லுக்குப் பெண்’ என்ற பொருள், முழுமையானதாகக் குறிக்கப்படுகிறது. அதர்வ வேதத்தில், 'ஸ்திரி’ என்ற சொல் 'மனைவி என்று நெறிப்படுத்தப்படுகிறது. ருக் வேதத்தில், சடலங்களை எரித்ததற்கான சான்றுகளே இல்லை. புதைப்பதற்கான சான்றுகளே இருந்ததெனக் கூறலாம். ஆனால் அதர்வ வேதத்தில், புதைக்கும் பழக்கம் மாறி, எரிக்கும் வழக்கம் வந்தது. சடலங்களை எரித்த பின், நீர்க்கடன் செய்யும் வழக்கங்கள் தோன்றின. நீர்க்கடன் செய்வதற்கு ஆண் சந்ததியினரே உரியவராயினர். எனவே உலக வாழ்நாளின் கவலையைவிட மறு உலகின் நற்பலன்களைப் பற்றிய கருத்தும் கவலையும் மக்களிடையே முக்கியமானதாக ஊன்றப்பட்டன. இதனாலெல்லாம் பெண் ஆண் மக்களைப் பெறுவதற்கு மட்டும் உரிய கருவியாக நிலைப்படுத்தப்பட்டாள். கருவில் இருக்கும் குழந்தை, பெண்ணாகி விடாமல் ஆணாகப் பிறப்பதற்குரிய சடங்குகள் உருவாயின. ருக் வேத வழக்குப்படி சமுதாயம் இருந்து பின்னர் அதர்வ வேத வழக்கப்படி மாறிற்று என்று காலத்தைக் கணக்கிடு