பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காலந்தோறும் பெண் முதலில் மரச்சிற்பம் செய்யும் கலைஞனின் முறையாக இருந்தது. அவன் சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் ஒரு காய்ந்த மரத்துண்டை எடுத்துச் செதுக்கி, அழகிய பெண் வடிவம் ஒன்றை உருவாக்கினான். அதை முடித்து நிற்கச் செய்துவிட்டு, அடுத்தவனை எழுப்பினான். இந்த முறைக்காரன் பொன் நகைகள் செய்யும் கலைஞன். அழகான மரப் பிரதிமையைக் கண்டதும் நகை செய்து போட்டால் நன்றாக இருக்குமே என்று கருதினான். பிரதிமையில் சங்கிலிகள் ஏறின. கம்மல்கள், கைவளையல்கள் என்று அழகு செய்தான். இதற்கு அடுத்த முறைக்காரன் துணி நெய்பவன். 'ஒ இந்த அழகிய பிரதிமைக்கு ஆடிை இல்லாதது குறை அல்லவா? உடனே அழகிய சேலை ஒன்றை நெய்து, பிரதிமைக்கு அணிவித்தான். இறுதியாக விழித்திருக்க வந்தவன் குங்குமம் விற்பவன். பொழுது விடியுந் தறுவாயில் அந்தப் பிரதிமையின் நெற்றியில் குங்குமத்தை எடுத்துத் தீற்றினான். மரப்பிரதிமை உடனே உயிர் மெற்று, நாணமும் எழிலும் குலவும் நங்கையாக நின்றாள். நான்கு நண்பர்களும் அந்தப் பெண்ணை யார் மனைவியாக்கிக் கொள்வது என்று தமக்குள் பூசலிடத் தொடங்கினார்கள். மரச்சிற்பி அவளைத் தானே உருவாக்கியதால், தானே அவளுக்குரியவன் என்று வாதிட்டான். பொன் அணிகள் செய்து மூட்டியவனும், ஆடை நெய்து அணிவித்தவனும் தங்களுக்கே அவள் உரியவளாக வேண்டும் என்று உறுதியாக நின்றார்கள். குங்குமக்காரனோ, தான் குங்குமம் வைத்ததாலேயே அவள் உயிர் பெற்றாள் என்று உரிமை கோரி வாதாடினான்.