பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காலந்தோறும் பெண் ஆனால் பரிசிலாக வந்த ‘வதுக்கள் தத்தம் எசமானருடன் தொடர்பு கொண்டு ஆண்மக்களை ஈன்றதும், ஆரிய மனைவியருக்குச் சமமாகவே சமுதாய மதிப்பையும் பெற்றார்கள். குங்குமத் தீற்றலை மணச்சடங்காக வழக்கில் கொண்டு வந்தவர்கள், வதுக்களாக இருக்கலாமோ என்பது சிந்தனைக்குரியது. இன்னும் ஒரு படி முன்னேறினால், அடிமைப் பெண்கள் வதுக்களாயினர் என்று அடையாள மிடப்பட்ட சின்னமே, குங்கும மங்கலத் தீற்றலாயிற்றென்றும் கொள்ளத் தோன்றவில்லை? 12. குங்குமச் சின்னம் பொட்டும்-கலையும் லெனின் கிராத் நகரின் தெருவொன்றில் நடை பாதையில் நான் தனித்து விடப்பட்ட சுதந்திரத்தை அநுபவித்தவளாய் நடந்து கொண்டிருக்கிறேன். காலை எழுந்தவுடன் நம்மைப் பிணைக்கும் எத்தனை எத்தனையோ கடமைக் கயிறுகளிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சி: தெரிந்தது பழகிய இடம், முகங்கள் என்ற பிணைப்பும் இல்லாத புதுமைகள் எனது ஆர்வக் கண்களால் பருக இயலாத புதுமை வெள்ளமாய் விரியும் வேற்று மொழிச் ♔{DA). சட்டென்று எனது பாதை தடைபட்டுப் போகின்றது. என்னைச் சுற்றி ஒரு வியப்பு வளையமே நெருங்கிவிட்டது. அந்த முகங்களுக்கும் மின்னிய கண்ணொளிப் பார்வை களுக்கும் கேள்விக்குறியாக நானே நிற்கிறேன். புரிந்து கொள்ளச் சில மணித்துளிகள் ஆகின்றன. எனது சேலை உடை மட்டும் அந்நிய உடையைப் பறையடிக்கவில்லை.