பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் * 83 ஒரு மூதாட்டி மெல்லிய பறவைக் கதகதப்புடன் என் கையைப் பற்றி இழுக்கிறார். நெற்றிப் பொட்டை இன்னொரு கை சுட்டுகிறது, வியப்பு விழிகள் மின்ன வினா எழும்புகிறது. “இந்தச் சிவப்புப் பொட்டு அணிவதன் நோக்கமென்ன? இது சமயக் குறியா?” இதைத் தெரிந்துகொள்ளவே அத்துணை நாட்கள் தவம் கிடந்தாற் போன்றும், திடுமென்று நகரத்து நடைபாதையில் நான் அகப்பட்டுவிட்டாற் போன்றும் புத்தார்வம் குமிழியிடும் புன்னகைகள் என்னைச் சுற்றி மொய்க்கின்றன. “இந்து சமயச் சின்னமா? சடங்குகளுக்குரியதா? ஆண்களும் தரிக்கலாமா?’ பல்வேறு வினாக்கள் என்னைத் தாக்க நான் திக்கு முக்காடினாலும் சமாளித்துக்கொண்டு கோர்வையில்லாமல் ஏதேதோ கூறுகின்றேன். உண்மையில் எனது அறியாமை எனக்கே வெட்ட வெளிச்சம் ஆயிற்று. “சமயச் சின்னமா சடங்குகளுக்குரியதா?’ என்னால் ஆங்கிலத்தில்தான் கூற முடியும். அவர்களில் எத்தனை பேருக்குப் புரிந்ததோ புரியவில்லையோ? என்ற இயலாமை வெட்ட வெளிச்சமாகப் புரியாத புண்ணியத்தை மொழித் தடை கட்டிக் கொண்டது. இத்தகைய சந்தர்ப்பங்கள் இந்தியாவிலிருந்து செல்லுகின்ற பல பெண்களுக்கும் நேர்ந்திருக்கும். குங்குமப் பொட்டு திலகமிடுதல் குறித்து இன்றுவரையிலும் திட்டவட்டமான கருத்தை யாரும் எடுத்துரைத்ததாக என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை. ஒரு சமயம் பலப் பல ஆண்டுகளுக்கு முன் புறநகர்ப் பேருந்து ஒன்றில் கிராமத்து முதியவர் ஒருவரும், கிராமத்து பள்ளி ஆசிரியர் போல் தோன்றிய இள வயதுக்காரர் ஒருவரும் ஊர்தியில் உள்ளோர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் விவாதித்துக்கொண்டு இருந்தனர். பெண்களின்