பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காலந்தோறும் பெண் வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம் விவரிக்கும் அறுபத்து நான்கு கலைகளில் நெற்றித் திலகங்களின் வாயிலாகச் செய்தி சொல்லல் ஒர் அழகுக் கலையாகவே விவரிக்கப்படுகின்றது. ருக் வேத காலத்தில் இளவயதுடைய ஆடவரும் பெண்டிரும் ஆடல், பாடல், அறிவார்ந்த உல்லாசக் களியாட்டங்கள் என்று இன்பமாகப் பொழுதைக் கழிப்பதற்குரிய சமானம் (அல்லது சமாஜம்) என்ற அமைப்புகள் இருந்தன. திருமணமாகாத இளைஞர்களும் திருமணம் ஆன இளைஞர்களும் இங்கே குழுமுவார்கள். காதலொழுக்கம் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக இருக்கவில்லை. தனித்துக் காதலர் சந்திக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு செய்திகள் பரிமாறிக்கொள்ள இந்த அழகுக்கலை பயன்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் வாத்ஸ்யாயனரின் காலம் மிகவும் பிற்பட்டதாகும். குப்தர் காலம்’ என்று கருத்துரைக்கப் படுகிறது. பல்வேறு மகரந்தப் பொடிகளால் உடலுக்கு வாசனையும் அழகும் நறுமண மூட்டல், கண்களுக்கு மையெழுதல் ஆகிய அலங்காரங்களைப் பற்றிய குறிப்புகள் ருக் வேத கால மகளிரைப் பற்றிய விவரங்களில் காண இயலுகின்றது. ஆனால் மங்கலப் பொட்டு என்ற குங்கும திலக வழக்கம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. எப்படியாகினும் குங்குமத்திலகம் கணவனுடன் வாழும் ஒரு நிலைக்குரிய அலங்காரக் காப்பாக முற்காலங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. இராமாயண, மகாபாரத இதிகாச காலம் காவியப் பெண்களின் சித்தரிப்புக்கும், அவற்றை ஒட்டிய தமிழ் வடிவக் காவியப் பெண்களின் சித்தரிப்புக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை இந்த உண்மையினால் உணர முடிகிறது. ஒரு சிறு எடுத்துக்காட்டாக கைகேயி தசரதனிடம் வரம் பெறுமுன் தன் கோலங்களைக் களைந்து சோக