பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 87 வடிவுள்ளவளாகக் கிடந்த நிலையைப் பார்க்கலாம். வால் மீகியின் சித்தரிப்பில் கைகேயி கூந்தலை ஒற்றைப் பின்னலாகக் கிடத்திப் பின்னிக்கொண்டு கிடந்தாள் என்றும் கம்பரின் சித்தரிப்பில் அவள் திலகத்தை அழித்துக் கொண்டாள் என்றும் பார்க்கிறோம். இந்த மாறுதல் பெண்ணின் அலங்காரங்கள், கணவனுடன் வாழும் நிலைக்குரிய முக்கியத்துவமாக மாறி திட்டத்தை விளக்குகிறது. மேலும் கம்பர் திலகத்தைக் குறித்திருப்பது, பின்னால் அவள் மங்கலமிழக்கப் போவதை சூசகமாக அறிவிப்பதாகவும் விரிவுரையாளர் கூறுகின்றனர். நெற்றித் திலகங்களின் வாயிலாகச் செய்தி சொல்லல் என்ற கலையில் இந்த மங்கல முக்கியத்துவம் கற்பிக்கப் பட்டிருப்பதாகக் கொள்ள முடியாது. வாசவதத்தை என்ற நாடகக் காவியத்தில் இந்த முறைத் துது விவரிக்கப்படுகிறது. அரசனின் மனைவிக்குத் தோழியாகப் பணிபுரியும் வாசவதத்தை அரசனின் காதலி, காதலனாகிய அரசனுக்கு சந்திக்குமிடம் பற்றிச் செய்தி அனுப்ப அரசியின் நெற்றியில் மாறி மாறி இவர்கள் தீட்டும் திலகமே குறிப்பாகிறது. இந்தப் பயன்படு கலைகுறிக்கும், திலகத்துக்கும் 'புருஷன்” என்ற மிகப்பெரிய அழுத்தமான பிணைப்புக்குரிய சின்னத்துக்கும் எத்தனை வேற்றுமை? 13. திருவிளக்குப் பூசையில் கரையாத இருட்டு வீடு தேடி வந்து, வாயிற்கதவைத் தட்டி அழைத்து இப்படி ஒரு விளம்பரத்தாளை ஒரு பையன் கொடுக்கிறான்.