பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் 7

வைத்த அணியாரங்களை வார்த்தைச் சட்டங்களில் பொருத்தி அந்தப் படிவங்களை மாட்டிவிடுவது படைப்புதான் என்றால், ஏன், எதற்காக என்ற சிந்தனை தேவையே இல்லையா? கண்ணீரும் பேரிரக்கமும்தான் வெற்றிகரமான படைப்புக்குரிய அம்சங்களா? பிரச்சினைகளை, வாழ்க்கையின் குறுக்கு வெட்டுப் பதிவினூடே, யதார்த்தபூர்வமாகப் பிரதிபலிக்கச் செய்கையில், அந்தப் பிரச்னைகளின் களம், கனம் காரண காரியங்கள் ஆகிய அம்சங்கள் ஆராயப்பட வேண்டியவை அல்லவா?

ஒரு பெண் அடாங்காப்பிடாரியாக இருக்கிறாள்; வம்பு பேசுகிறாள்; புருஷனுக்கு நஞ்சூட்டுகிறாள்; தீமையே வடிவானவளாக இருக்கிறாள். உண்மையிலே இப்படி ஒரு பெண் இருந்தாலும், அத்தகைய ஒரு பாத்திரத்தைத் தன் படைப்பில் கொண்டுவரும் ஓர் இலக்கிய ஆசிரியர் அவள் ஏன் அந்தமாதிரி ஆனாள் என்று ஒரு சிந்தனையைக் காட்ட வேண்டாமா? (இப்போதெல்லாம், இந்த ஏன் கேள்வி, ஒரு பெண்ணை உடலை வைத்துப் பிழைக்கவோ, பழி தீர்க்கவோ மட்டும் ஆராயப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டு, அமர்க்களமாக ஆதரவையும் புகழையும் பெற்று ஆசிரியருக்கு விருதுகளை எல்லாம் தேடிக் கொடுக்கின்றன.

அறிவுபூர்வமான சிந்தனை, பெண்ணை வழுக்கி விழும் நிலைக்கு நியாயப்படுத்துவதற்கு மட்டும் உதவாமல் அவள் ஏன் வாயாடியாக, வம்பு பேசுபவளாக, பொறாமைக்காரியாக உருவாகிறாள் என்ற மாதிரியான கோணங்களில் செயல்படாமல் அவள் தன்மைகளுக்கு அப்படியே ஓர் அரக்கு முத்திரையைக் குத்தி, நடைமுறைப் பெண் நெறியாக நிலையாக்கப்பட்டிருக்கிறதே?

பெண்ணாவது மாயப்பிசாசு, சும்மா இருக்கும் ஆணின் மனசில் மோகப் பாம்பாக வந்து சுருண்டு அவனைக் குதறிவிடும் பேய். அவனுடைய (ஆன்மீக) உயர்வை