பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காலந்தோறும் பெண் இருக்கிறது. இவர்களில் சிலர், அலுவலக மேலாளருக்குப் புகை பிடிக்கத் தீ மூட்டும் சேவை செய்பவர்களாகவும் இருக்கக்கூடும். பார்ட்டிகளில் ஸாராவும் மந்தகாசமுமாக வெற்றி கொள்ளும் நாயகியராகவும் விளங்கக்கூடும். அவர்களையும் இந்திய கலாச்சாரப் பெருமை வட்டத்துள் கவர்ந்து இந்தியப் பண்பாட்டைக் காக்கும் அருந்தொண்டையும் இத்தகைய ஸ்வாமிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமய நிறுவனம், இந்தத் திருவிளக்கு சோதிக்குள் நானும் வந்த அருள் பெறவேண்டும் என்று உவந்து அழைத்தது. "தமஸோர்மா ஜோதிர் கமய'இருளிலிருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்வாயாக...!" என்ற வாக்கியம் எல்லோருக்கும்தானே பொது! குப்பத்திலிருந்து தள்ளாத வயதில் கீரைக்கூடையைச் சுமந்து வந்து தெருத் தெருவாய்ச் சுற்றும் பொன்னம்மாளை இந்தப் பூசையில் சேர்த்துக்கொள்கிறீர்களா? ஐந்து குழந்தை களுடன், புருஷன் இல்லாமல் சீவியம் செய்து அவர்களை ஆளாக்கிய பிறகும் அநாதையாக வயிறு பிழைக்க உழைக் கிறாள். இவளைவிடத் தகுதியானவர் இந்த அருளுக்குப் பாத்திரமாக இருப்பார்களா? என்றோ புருஷன் முகம்கூட நினைவில் பதிந்திராத சுருக்கில், அவனைக் கொள்ளை நோய் பலி கொள்ள, கூந்தலை முடிந்து, வெள்ளைச் சீலைக்குள் ஒடுங்கியவளாக மடம், ஸ்வாமிகள் என்று, அங்கேயே பெருக்கி, மெழுகி, ஊழியம் செய்கிறாளே முத்தம்மை அவளுக்கு இந்தப் பூசையில் கலந்துகொள்ள அருகதை உண்டா? நான் இந்தக் கேள்விகளைத் தொடுத்து அவர்களையும் பூசையில் இணைத்துக்கொள்ள நிபந்தனை போட்டபோது சமயத் துரண்கள் சொல்லாமல் நழுவிவிட்டன. இப்போது இந்த விளம்பரந்தான், என்னை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளுகிறது.