பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 91 அகண்ட காவிரி பாயும் கிராமம் அது. எங்கள் வேதபுரத்து வீதியிலே, வெள்ளைச் சேலையும் முக்காட்டு முகமுமாக முடங்கிவிட்ட அனாதைகள் எண்ணமுடியாத வர்கள். இவர்கள் கோலோச்சுவதற்கு ஒரே ஒரு இடம் உண்டு. காவிரிப்படித்துறைதான் அது. இந்தப் படித்துறையின் இரு மருங்கிலும், பக்கச் சிறகு முளைத்தாற் போன்று சில கற்களைப் பரவி நீர்த் துறைகள் அமைத்திருந்தார்கள். பிரதானமான படிகளில் இறங்கி, அரண்கள் போன்றமைந்த கற்களைத் தாண்டினால் வசதியாகத் துவைக்கும் கல், துணி பிழிந்து உலர்த்தத் தோதான கற்சுவர் என்று இருவர் குளிக்க வசதியாக அமைந்திருக்கும். பிரதானமான படிக்கட்டுத் துறையின் இரு மருங்கிலும் உள்ள இத்துறைகளைக் குட்டிப் படித்துறை என்று சொல்லலாம். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவை மடிப்படித்துறை என்றே வழங்கி வந்தன. ஏனெனில் எங்கள் வேதவீதியின் வெள்ளைச் சேலை அநாதைகள் அங்கே புலராப் பொழுதின் விடியற்காலையிலிருந்து பகல் பன்னிரெண்டு மணி வரைகூட ஆதிக்கம் செலுத்துவார்கள். அந்தக் கால் அகன்ற காவிரியை இப்போது நீர்ப் பெருக்குக்குக் கற்பனைதான் செய்ய வேண்டும். இந்த நடுப்படித்துறை, மஞ்சள் பூசும் வர்க்கத்தினருக்கு உரியது. வண்ணச் சேலைகளுக்கும், வயிர, தங்க மினுமினுப்புகளுக்கும் உரியது. மஞ்சள் உரைத்த தடங்கள் பொன்னாய் மின்னிக் கொண்டிருக்கும். ஆங்காங்கு ஊறிய மஞ்சள்துண்டுகள், அறைத்த விழுதுகள், வெற்றிலைப் பாக்கு முதலியன சிதறிக் கிடக்கும். ஆனால் மடிப்படித்துறைக்கு மங்கலங்கள் கிடை யாது. அவற்றைச் சுவாதீனமாக வைத்திருக்கும் சில அனாதை களில் மிகக் கடுமையான புள்ளிகள் சிலர் உண்டு. அவர்களுக்கு இந்த மஞ்சள் உரைக்கும் இனத்தினரிடம் அடிமனத்துப் புகைச்சல் குமுறிக்கொண்டிருக்கும். ஆனால் அதை எப்படி வெளிக்காட்டுவார்கள்?