பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 95 வீடாதலால் பொழுது விடிந்து அவள் வெளியே தலை நீட்டியதில்லை. விடியற்காலை மூன்று மணிக்கு வீதியில் சாணமிட்டுப் பெருக்கிக் கோலம் போடுவாள். விடியுமுன் மயானத் துறை சென்று காவிரியில் நீராடி வருவாள். ஒ! இந்தச் சமயச் சம்பிரதாயங்கள் இவர்களை உயிரோடு நசுக்கியதற்கு எந்த நியாயம் சப்பைக் கட்டுக் கட்ட முடியும்? இதற்கு வேத இசைவு உண்டா? 14. வேத (அ) தர்ம பரிபாலனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் பேட்டை மாதர் சங்க உறுப்பினர்கள் காஞ்சியில் சென்று அங்கு தங்கியிருக்கும் ஆசாரிய சுவாமிகளைத் தரிசித்து அருள் பெற்று வர ஒரு 'சுற்றுலாப் பயணத்திட்டம் போட்டிருந்தார்கள். இந்தத் திட்டத்தில் நானும் புகுந்துகொண்டேன். சுமார் ஐம்பது பெண்மணிகள், பிராமணர், அல்லாதார், முதியவர், இளையவர் என்று பாகுபாடில்லாத வகையில் சேர்ந்திருந்தனர். அது சித்திரை மாசக் கோடை நாள்-காலையில் கிளம்பி, சுவாமிகள் தங்கியிருந்த குளக்கரை ஓரத்துக் கோயில்முன் எங்கள் வண்டி வந்து நிற்கையில், மணி பன்னிரண்டரையாக இருந்தது. அடியும் பொடியும் ஒட்டும் உச்சி நேரம். பலருக்கும் தாகம். சில சிறுமிகள், குழந்தைகளும் இருந்தனர். இந்த நேரத்தில் எப்போது நிழல் கண்டு, விடாயாற்றிக் கொண்டு, மூச்சு விடுவோம் என்று வெம்மை நெருக்கடியேற்றியிருந்தது. சில சிறுவர்கள் பசி பசி என்று கட்டுச் சோற்றுக் கூடைகளைப் பார்த்துப் பிடுங்கி எடுத்தார்கள். வண்டி, நின்று பெண்கள் இறங்கத் தொடங்கியதும் உள்ளிருந்து ஒரு பிராம்மணர்-வெளி வேடம் அப்படி) வந்தார்.