பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

7


என்னும் அச்சம் ஒழிந்து, ஆலயங்தொழுவது சாலவும் வீணென ஒழித்தனர். பூஜை யில்லை, தோத்திர மில்லை, மந்திர மில்லை, ஒழுக்கமில்லை. மனிதர்கள் மாடு போலக் காலங் கழிக்கின்றனர். கோயில்கள் எல்லாம் அடைபட்டுக் கிடக்கின்றன. குருக்கள்மார்களெல்லாம் வரும்படி யின்றிக் கொடும் பசியுற்றுத் தவிக்கின்றனர். காலனார் வரமுடியாமை யால் பசி நோயால் இறத்தலின்றிக் கலங்குகின்றனர். காய், கனி, சருகுகள் இவற்றை யுண்டு ஏக்க முறுகின்றனர். காலனோ கொழு கொழென்று சதை நிரம்பி, கவலையின்றி அலைதலின்றி, ஆரோக்கியமாய் இருந்த இடத்திலேயே உண்பதும், உறங்குவதுமாய் இருக்கின்றான். கடோர சித்தன் இட்டது தான் சட்டம். யாராவது அவனுக்குக் குறுக்குச் சொன்னால் காலனைக் கட்டவிழ்த்து விட்டு விடு வேன் எனக் கூறி அவர்களை அச்சுறுத்துகின்றனன்” என விஸ்தாரமாய்க் கூறினர்.

இக்கதை யெல்லாம் கேட்டனர் பெருமாள். நன்று நன்று என நகைத்தனர். இந்த மானிடர்கள் இவ்வளவு அறிவிலிகளா ! யமனுக்கு அஞ்சித்தானா கடவுளை வணங்கி வந்தனர். இவர்கள் வாழ்த்தாவிட்டால் தேவர்கள் வாழ்வது அரிது என நினைத்தனர் போலும். தங்கள் பாபச் சுமைகள் ஒழிவதற்குக் கடவுளைப் பணிய வேண்டும் என்பதை அற மறந்தனர் போலும். பாபம் ! காலனொடுங்கவே இவர்கள் பாப வினைகள் மலைபோல வளருகின்றனவே. காலனைக் கட்டவிழ்த்து விட்டால்தான் இம்மனிதர்கள் நன்னெறியைக் கைப்பற்றி உய்வார்கள் என யோசித்து, நாரதரை நோக்கி “இவ்விஷயங்களை