பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

காலனைக் கட்டி யடக்கிய


விசித்ர ஆதனத்தில் ஆடை யாபரணங்களுடன் கொழுத்த மேனியும் மத்தள வயிறும் விளங்க மாப்பிள்ளை போல வீற்றிருப்பதைப் பார்த்தனர். கடோரசித்தன் உணவுக்கு வரும் நேரமாயிற்றே என்று அவனை எதிர்பார்த்த வண்ண மாய்க், காலன்-

“இருந்த இடத்தில் எல்லாச் சுகமும் என்னை நாடுமே
எழைச் சனங் கடோர சித்தன் தன்னைப் பாடுமே!

வீணலைச்சல் போச்சு போச்சு நித்தம் ஆனந்தம்!
விந்தை யாச்சு இந்த வாழ்வு நித்தம் ஆனந்தம்!

நிந்தை போச்சு சாபம் போச்சு நித்தம் ஆனந்தம்!
விந்தை யாச்சு இந்த வாழ்வு நித்தம் ஆனந்தம்!”

-எனப் பாடிக் கொண்டு குதூகலமாய் இருப்பதையுங் கண்டனர்.

உடனே, காலனை நோக்கி ஒரு பெரு மூச்சு விட்டனர். அம் மூச்சு அக்கினி வீசுஞ் சுழற் காற்றாகிக் காலன் அமர்ந்திருந்த விந்தை நாற்காலியில் உள்ள எஃகன்ன கம்பிகள் யாவும் உருகி விழும்படிச் செய்தது. உடனே அச்சுற்று எழுந்தனன் காலன். யமதருமராஜருடைய உருவம் எதிரில் தெரியவில்லை. தான் பழகி யிருந்த அவருடைய குரல் மாத்திரம் பின்வருமாறு கேட்டது. “எனது பிரதிநிதியாகிய நீயா இங்ஙனம் மண்ணுலக வாழ்க்கையில் ஆசைப்பட்டு மதி மயங்கி மகிழ்கின்றாய்? நன்று, நன்று, நன்று உனது மதி. விடு, விடு, விடு இவ்வறி வீனத்தை. உடனே புறப்படு, புறப்படு, புறப்படு உன் வேலைக்கு. முதலாவது உனக்கு விருந்தளித்து வந்த 'வீணன் கடோ ரசித்தனைக் கட்டு, கட்டு, கட்டு; பின்னர்