பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

11


உன் பழைய பாக்கியை எல்லாம் பார், பார், பார். சாவில்லை என்று கூறிக் கடவுளை மறந்து, கொங்தளிக்குங் கடலிற் கூத்தாடும் அம்மூர்க்கர்களைப் பிடி, பிடி, பிடி ; பின்னர், குழந்தையைக் கவனியாது விட்ட தாயெனும் பெயுருள்ள அம்மதியிலியைப் பிடி, பிடி, பிடி; பின்பு, கோயிலிற் கொள்ளையிட்ட கள்ளர்களைப் பிடி, பிடி, பிடி. பின்னர், பிறன்மனை விழைந்த அப்பேதையைப் பிடி, பிடி, பிடி. அவர்களுக் கெல்லாம் கடவுளுண்டு, யமதருமனுண்டு, காலனுண்டு எனக் காட்டு, காட்டு, காட்டு. நரகத்திற் குடி யேறுவதற்கு நிரம்ப இடம் காலியாயிருக்கின்ற தென்று அவர்களுக்குச் சொல்லு, சொல்லு, சொல்லு”-என இடி யன்ன தமது குரலில் உத்தரவிட்டு மறைந்தனர் யமதரும ராஜர்.

மறைந்த மறு நிமிஷமே வெளியிற் போயிருந்த கடோரசித்தன்--

காலனை வெல்வதற் காகவம் மார்க்கண்டர் கண்ணடைத்து
நீலமார் கண்டர்க்கு நித்தமும் பூஜை நிகழ்த்தி வந்தார்
சாலவே காலனைத் தானே யடக்குங் கடோரசித்தன்
போலவே லோகத்தில் உள்ளவர் யாரே புகலுவீரே!

காலகா லன்னெனுந் தெய்வமொன் றுண்டென்னுங் காசினியோர் காலகா லன்தான் கடோரசித் தன்னெனக் கண்டுணர்வார்.(இனிக்

எனத் தானே பாடித் தானே மகிழ்ந்து கலக்க மற்ற சித்தத்தவனாய் நுழைந்தனன் தனது மாளிகைக்குள், நுழைந்து கூடத்தில் வந்த அந்நிமிஷமே அவன் நெஞ்சைப் பிடித்து இறுக்கினன் அவன் வருகையை எதிர் பார்த் திருந்த காலன், “நீ எப்படி வெளிவந்தாய்?” எனக் குழ