பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

காலனைக் கட்டி யடக்கிய


றினன் கடோரசித்தன். “யமதருமராஜர் இங்கு வந்து நீ யிட்ட தளையினின்றும் என்னை விலக்குவித்தனர். அவரது மூச்செனு நெருப்பினால் உருகி வீழ்ந்தன. நீ யிட்ட விலங்குகள். நேரமாயிற்று, புறப்படு, இன்னும் நிரம்ப வேலை யிருக்கின்றது” என்றனன் காலன். “உண்மை, எனக்குக் காலநெருக்கந்தான். ஆயினும், உனக்கு இத்தனை நாள் அன்ன மிட்டு, ஆடையளித்துப் பாலூட்டிப் பழந் தந்தேனே; அதற்குக் கைம்மாறாக, அந்த நட்புக்கு அறிகுறியாக, யான் என் மனைவியிடம் என் மோஷ சம்பந்தமான விஷயம் சில பேச எனக்கு அதுமதி தர வேண்டும்”-எனக்கூறி “எனது கண்மணீ! கற்பகவல்லலீ!” எனத் தனது மனைவியை விளித்தான் கடோரசித்தன். காலனும் “பாபம், தனது ஆத்மா நல்லகதி யடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யட்டும் இவன்" என இரங்கிப் பிடித்த பிடியை விடாது சற்று நிதானித்தான். வந்தனள் கற்பகவல்லி. வந்ததும் அவளைத் தழுவி அவள் காதினில் வெகு ரகசியமாகத் தனது இறுதிநாள் மொழிகளைப் பின் வருமாறு கூறினன். "என் கண்ணே! கற்பகமே! யார் என்னை வெறுத்தாலும், நிந்தித்தாலும் நீ என்னிடத்து என்றும் நிலைத்த பத்தியும் அன்பும் உடையவள். உன் மொழி கடந்து நான் இதுவரையும் கடந்ததில்லை. நீ இப்போது யான் சொல்லும் மொழிகளை மறவாதே, கடவாதே. கேட்டாயோ! மாதரசீ! வைகுண்டத்தில் பெருமாளுக்கு ஏதோ சந்தேகமாம். அது சம்பந்தமாக என்னை ஏதோ யோசனை கேட்க வேண்டுமாம். அதற்காக, அவர் தமது தூதனை அனுப்பி யிருக்கிறார். கொஞ்ச நேரம் “இவ்வுடலை விட்டு நான் போக வேண்டியிருக்கிறது. மானுடராம்