பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

13


உங்கள் கண்ணுக்கு என் உடம்பு பிணம் போலத் தோன்றினாலும், புத்திசாலியாகிய நீ அவ்வுடலை நன்றாய் அலங்கரித்து அது வாடாவண்ணம் கட்டிலின் மீது அதை வைத்துப் பாதுகாத்திருக்க வேண்டும். நமது நண்பர் காலனார் இப்போது கட்டுண்டில்லை. அவரும் என்னோடு வருகின்றார். அவருக்கும் எனக்கும் வழக்கம் போல உண்பன, தின்பன, பருகுவன யாவையும் சரியான நேரத்தில் என் படுக்கைக்குச் சமீபத்தில் நீ வைத்து வரவேண்டும். தெரிந்ததா ? அன்று கொண்டு வந்தேனே முத்துமாலையும் நவரத்ன வங்கியும் அவைகளை நான் திரும்பி வந்த வுடனே உனக்குக் கொடுப்பேன், தெரியுமா ? இப்போது நான் சொல்லிய வண்ணமே நீ செய்வதாக எனக்குச் சத்தியம் பண்ணிக்கொடு” என்றனன். அவளும் அங்கனமே செய்வேன் என்று ஆணையிட்டுரைத்தனள். கடோரசித்தனும் அந்த முத்துமாலை மீதிருக்குங் காதல் காரணமாகவேனும் இவள் நமது தேகத்தைப் பத்திரமாய்ப் பார்த்து வருவாள் என்ற திடசித்தத்துடன் உயிரை நீத்தனன்.

கடோரசித்தனது உயிரை யமலோகத்துக்குக் கொண்டு போகும்படிச் “சங்கிலிக்கறுப்பன்” என்னும் ஒரு துாதனிடம் ஒப்புவித்துக் காலன் சென்றனன். காலன் மறைந்த அக் கணமே கடலிடை ஒவென்றலறுங் கூச்சல் ஒன்று கிளம்பி யடங்கிற்று. நிலமிசை ஓவென்றழுங்குரல் எங்குங்கேட்டது. காலன் தனது கட்டவிழ்த்து வந்து உயிர்களைக் கவர்ந்து எங்கும் முன்போல் உலவுகின்றனன் எனப் பாருளோர் கண்டனர். மூடிய கோயில்களெல்லாம் உடனே திறக்கப்பட்டன. ஜப மென்ன, தப மென்ன, தூப மென்ன, தீப