பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

காலனைக் கட்டி யடக்கிய


மென்ன, பூஜை என்ன, நிவேதனம் என்ன, திருவிழா என்ன, திருப்பணி என்ன ? எங்கும் வேத கோஷந்தான், தேவ ஆராதனைதான். நிற்க.

சங்கிலிக் கறுப்பனுங் கடோரசித்தனும் நரகலோக நோக்கிச் செல்கின்றனர். பாதாளலோக வழியாக இருள் சூழ்ந்த நெறியிற் செல்கின்றனர். அப்போது கடோர சித்தன் சங்கிலிக்கறுப்பனை நோக்கி, “அண்ணே நீங்கள் கள்வராகிய எங்கள் குலதெய்வமல்லவா? எனக்கு ஏன் இந்த (அவ மிருத்து) அகால மரணம்? வயது நாற்பது கூட எனக்கு நிறையவில்லையே. என்னை எங்கேயோ பேரிருளில் அழைத்துச் செல்லுகின்றீர்களே.” என மிக விநயமாய்க் கேட்டனன். அதற்குச் சங்கிலிக்கறுப்பனும் "அன்பனே! நீ செய்தது தவறு. உன்னைப் போலும் மனிதர்களுடன் நில்லாமல் கடவுளிடத்தேயே உன் சாமர்த்தியத்தை நீ காட்டப் புகுந்தாய். அங்ஙனம் செய்யாமல், உன்னை விட அறிவிற் குறைந்தவர்களையே நீ மோசஞ் செய்து வந்திருப்பாயானால் - உன்னிலுங் கரிய கள்ளன் இருக்கின்றானே “காகம்” எனப் பேர் படைத்து ஆயிரம் வருடம் அகவை கொண்டவன் - அவனிலும் அதிக வாழ் நாள் உனக்குக் கிடைத்திருக்கும். செங்கோலுக்கு முன் சங்கீதமா? செங்கண்மால் முன் உன் ஜெபம் பலிக்குமா? அவர் கோயிலிற் கொள்ளையிட்டாய். அவர் உன் உயிரைக் கொள்ளை கொண்டார்” எனப் பதில் இறுத்தனன். கடோர சித்தனும் “உண்மை தான். என்னை மாத்திரம் இப்போது விட்டு விடுங்கள்; எங்கள் திருமாலுக்குப் பூலோகத்தில் நான் ஒர் உண்மை அடிமையாய் உழைத்து