பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

காலனைக் கட்டி யடக்கிய


உதவுவார். உடலினின்றும் உயிர் கழன்ற பிறகு பேசுவது வீண் வார்த்தை” என்றனன். “ஒஹோ! நான் என் உடலிடைப் புகுந்து பூவுலகிலிருந்து வேண்டினால் தாங்கள் எனக்காகப் பெருமாளிடம் பரிந்து பேசி வரம் வாங்கித் தருவீர்கள் போலும். அப்படித்தானா?” என வினவினன் கடோர சித்தன். “தடையின்றி நானுங் கேட்பேன்; அவருங் கேட்டவரங் கொடுப்பார்” என்றனன் சங்கிலிக் கறுப்பன். “மிக்க வந்தனம்; இப்போது சொன்னீர்களே அவ்வுறுதிமொழி போதும்; நான் இந்த இருளுலகத்தைக் கடந்து என்னுடைய பழைய உடலிற் புகுவேனானால் உங்களை நம்பலாம் அல்லவா? கள்வர்களுக்குள் கட்டுப்பாடு உண்டல்லவா ? நீங்கள் எங்கள் குலதெய்வமல் லவா? என்ன சொல்லுகிறீர்கள்” என உசாவினன் கடோர சித்தன். அதற்குச் சங்கிலிக்கறுப்பன் “நீ இவ்விருளுலகந் தாண்டி உன் உடலிற் புகுந்து வேண்டிய வரத்தைக் கேள். அப்போது என்னை நம்பு, இப்போது பேசுவது வீண் பேச்சு” என்றனன். பின்லும், கடோரசித்தன் "அடிமை! புத்தி! ஆனால் இன்னும் ஒரு சந்தேகம். நான் எப்படியாவது என் உடலிற் புகுந்து கொள்ளுகின்றேன் என வைத்துக் கொள்ளுவோம். நான் உங்களை வேண்ட, பின்பு நீங்கள் சென்று பெருமாளை வேண்ட, அதற்கெல்லாம் நாழிகையாகுமே; அதற்குள் நமனார் என்னை மறுபடியும் இங்கு இழுத்து வந்து விடுவாரே. அதற் கென்ன செய்வது!” என்றான். அதற்குச் சங்கிலிக் கறுப்பன் “அன்ப! நீ என்ன மனக்கோட்டை கட்டுகின்றாய். இவ்விருளுலகத்தையாவது நீயாவது கடந்தாவது செல்வ தாவது? இது சுத்த மதிஹீனம், சீ சீ சீ! நீ சுத்த