பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

காலனைக் கட்டி யடக்கிய


கடோரசித்தன். சங்கிலிக் கறுப்பன் சென்றதுங் கடோர சித்தன் அந்த ஆற்றங்கரையி லிருந்தபடியே தோணிக் காரனைக் கூப்பிட்டான். “கொண்டுவா தோணியை இப்படி” எனக் கூவினன். தோணிக்காரனும் “எங்கே என் கூலி எனக்குச் சேரவேண்டிய வாய்க்கரிசி சேர்ந்தால் தானே நான் உன்னை எனது தோணியில் ஏற்றுவேன்; அது தெரியாதா உனக்கு?” என்றனன். அதற்குக் கடோரசித்தன் “ஒஹோ ! என்னிடம் லஞ்சம் கேட்கின்றாயா? தகனமோ, புதையலோ செய்து கருமாந்தரம் செய்யப்பட்டவர்கள் அல்லவோ உனக்கு லஞ்சம் கொடுப்பவர்கள். வீடு இருந்தால் தானே, ஐயா, வீட்டுவரி , நிலம் இருந்தால் தானே நில வரி; அந்த மாதிரி, என்னைத் தகித்திருந்தால் அல்லது புதைத்திருந்தால் தானே உனக்குத் தகனவரி அல்லது புதையல்வரி கிடைக்கும். என்னை இடு காட்டில் இடவும் இல்லை; சுடுகாட்டிற் சுடவுமில்லை. தகன மில்லை, புதையல் இல்லை, ஆதலால் நான் ஒன்று மில்லை; ‘ஒன்று மில்லை’ என்பதற்கு வரி “ஒன்று மில்லை” அடே! முட்டாள்! இந்த கணக்குக் கூட உனக்குத் தெரிய வில்லையா?” என்றனன். இதைக் கேட்ட தோணிக்காரன் “ஒன்று மில்லை என்றல் தூக்கிட்டுச் சாவு” என வைது கொண்டே வெறுந் தோணியை அப்புறம் ஒட்டிச்சென்றான். அதற்குக் கடோர சித்தன் ‘எனக்கு எது கழுத்து ? நான் தான் பைசாச ரூபமாயிருக்கிறேனே’ உன் கழுத்தை இரவல் கொடு; தூக்கிட்டுக் கொள்ளுகிறேன்!” என்றனன். இதைக் கேட்ட கடோரசித்தனப் போலச் தகன மின்றியும் புதைய