பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

காலனைக் கட்டி யடக்கிய


அதற்கென்றேற்பட்ட வருடங்கள் கடந்த பிறகே இந்தப் பேய்க் கூட்டம் ஆற்றுக்கு இப்புறம் வரக் கூடுமாதலால், யமதருமராஜரே புறப்பட்டு ஆற்றுக்கு அப்புறம் போய்க் கடோரசித்தப் பேயை நோக்கி, ‘எட மூட! உன் ஏளனப் பேச்சை நிறுத்து. நிறுத்தாவிடில் அதற்காக ஏற்பட்ட தண்டனைக்கு உள்ளாவாய், அறிதி’ - என்றனர், அதற்குக் கள்ளன்

“தருமராஜரே! தங்களுடைய தரும நூல் முறையைக் கூறுகிறேன்; பேய்களாகிய எங்களை விசாரணை செய்யாமல் எங்களுக்கென் றேற்பட்ட பிரமாண நாள் கழியும் வரை, தாங்கள் எங்களைத் தண்டிக்கமுடியாது, விசாரணை செய்ய வேண்டுமானல் இவ்வாற்றைக் கடந்து தங்கள் பட்டனத்துக்கு நாங்கள் வந்த பிறகுதான் தாங்கள் எங்களை விசாரிக்கலாம். ஆற்றைக் கடக்க வேண்டுமென்றால் எங்கள் உடலம் புதைபட்டிருக்க வேண்டும்; அல்லது தகனமாயிருக்க வேண்டும். புதைபடாது போன துந் தகன மாகாது போனதும் என் பிழையல்ல. என்னுடைய பொல்லா மனைவியின் கொடுமை. அவள் என் உடலத்துக்கு ஒரு கைங்கரியமுஞ் செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கின்றாள். தாங்கள் என்பேயுருவை நீக்கிப் பூலோகத்துக்குச் செல்லும் வழி காட்டி என் உடலிற் புகும் ஆற்றலை எனக்குக் கொடுப்பீர்களானல், நான் அவளைப் பயமுறுத்தி உன் கடமையைச் செய், என் பிரேதத்தைப் புதை அல்லது தகனஞ் செய் என வெருட்டி அச்சுறுத்துவேன். அவளும் அங்ஙனமே செய்வாள். நானுந் தங்கள் பட்டணத்துக்குள் வர அருகனாவேன்.