பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

காலனைக் கட்டி யடக்கிய


கூற்றுவன் தோன்றிக் கடோரசித்தன் உயிரைக்கொண்டு சென்றனன். கடோ ரசித்தன் மாள்வதேது எனச் சலித் திருந்த சந்ததிகள் அவன் மாண்டவுடனே அவன் உடலத்தை வாசனைத் திரவியங்களிட்டுத் தகனஞ் செய்தனர். பிறகு, அவன் எலும்புகளைச் சேமித்துப் புதைத்து அதன் மீது ஒரு விசித்திரமான கட்டடம் கட்டி அதன் மீது,

காலனைக் கட்டிய கடோரசித் தப்ரபு
இவர் பெயர் என்றும் நிலவுக எங்கும்”

எனச் சாசனம் எழுதி வைத்தனர்.

கடோர சித்தனது சந்ததியார் ஆட்சி செய்து வந்த வரையும் ஜனங்கள் கடோரசித்தனது ஆற்றலையுஞ் செல்வத்தையும் புகழ்ந்தார்கள். அவனது குற்றங்களை வெளியிட அஞ்சினர்கள். புலவர்கள் அவனை “மகாயூகி” எனப்பண் பாடினர்கள். அரசர்கள் அவனைப் ‘பூலோக தனதன்’ எனக் கொண்டாடினர்கள். ஆனல், அவனுடைய சந்ததிகள் அற்ற பிறகு கடோரசித்தனது கொடுஞ் செயல்கள் இவை; அவன் நரகத்தில் இன்ன இன்ன வேதனைப் படுகின்றான் என்று ஜனங்கள் பலவாறு பேச ஆரம்பித்தார்கள். திரிகால ஞானமுள்ள ஒரு பெரியவர் மூலமாக கடோரசித்தன் நரகிற்படும் வேதனை இத்தன்மைத்து என உலகினருக்குத் தெரிய வந்தது. அது பின் வருமாறு.

நரகங்களில் ஒன்று இருள்சூழ் நரகம். அதில் ஒரு பாகத்தில் ஒரு எரிமலை இருக்கின்றது. அங்கே தனியாகக் கடோரசித்தப் பேய் ஓயா வேலை செய்து வருகின்றதாம். பாட்டுப் பாடிக்கொண்டே அந்த மலை உச்சிக்கு அடிவாரத்தி-