பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கணபதி துணை


காலனைக் கட்டி யடக்கிய
கடோரசித்தன் கதை

க்ஷ்மி சமேதராய் ஒருநாள் வைகுண்டத்தில் எமது நாராயணமூர்த்தி திருவோலக்கங் கொண்டெழுந்தருளியிருந்தார். அப்போது எம்பெருமான் திருச்செவியில் பூலோகத்தி னின்றும் “ஹரி கேசவா! ஹரி நாராயணா!சங்கு சக்ர கதாபாணி! புருஷோத்தமா! ஜெயதுங்க முகுந்தா! நீ காக்கைக் கடவுளன்றோ! இந்தக் கள்ளர் தலைவன் கடோர சித்தனைத் தொலைத்து எங்களைக் காத்தருள வேண்டும்” என ஒருபெரிய முறையீடு கேட்டது. இம்முறையீட்டைக் கேட்ட முராரி வாளா இருந்தனர். அங்கனம் இருக்க முடியவில்லை எங்கள் மாதா லக்ஷ்மி தேவிக்கு. “நீங்கள் ஏன் இந்த முறையீட்டைக் கேட்டும் இரக்கங் கொள்ளா திருக்கின்றீர்கள்? அன்று முதலைவா யுற்றயானை புலம்பிய போது ஒலமென்றுதவின கருணாகர மூர்த்தி யாயிற்றே நீங்கள்” என வினவினள். அதற்கு